கிரிக்கெட் வீரரை வைத்து சிவகார்த்திகேயன் எடுக்கும் புது அவதாரம்.. தனுஷுக்கு போட்டியாக போட்ட பக்கா பிளான்

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு நல்ல இடத்தில இருக்கிறார். நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். கடந்த தீபாவளியன்று இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மட்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இவர் இப்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிகராக ஆவதற்கு முன்பு தொலைக்காட்சியில் இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர், அதன் பின்னர் தன்னுடைய வித்தியாசமான தொகுப்பு வர்ணனையின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Also Read: ஊருக்கு மட்டும்தான் உபதேசமாம்.. அண்ணனுக்கு உதவாமல் டீலில் விட்ட தனுஷ்

இவர் நடிகராக மட்டுமில்லாமல், பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் இருக்கிறார். இவர் எழுதிய அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் இவர் கனா, வாழ் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக இருந்த இவர் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரராக இருப்பவர் நடராஜன். 2020ல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடினார். மேலும் ஐபிஎல் விளையாட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இன்றைய காலகட்டத்தில் இந்திய சினிமாவில் அதிகமான அளவில் பையோபிக் திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் நடராஜனின் பையோபிக்கும் படமாக இருக்கிறது.

Also Read: விஜய்யை வைத்து நன்றாக சம்பாதித்த சிவகார்த்திகேயன்.. பாவம் இது தளபதிக்கே தெரியாது!

இந்த பையோபிக் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சிவா ஏற்கனவே எதிர்நீச்சல், மான் கராத்தே போன்ற விளையாட்டு சம்மந்தப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடராஜனின் பையோபிக்கில் நடிக்க இருப்பதோடு அவரே அந்த படத்தை இயக்க இருப்பதாக நடராஜனே தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் மூலமாக திரையுலகிற்கு வந்தவர். அதன் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் தனுஷுக்கு எதிராகவே சிவா எல்லா துறையிலும் கால் எடுத்து வைத்து கொண்டிருக்கிறார். தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனர் ஆனது போல் இப்போது சிவகார்த்திகேயனும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

Also Read: 70 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. பேராசை பெருநஷ்டம் ஆன கதை!

 

 

Next Story

- Advertisement -