பலி கெடாவாக மாறிய சிவகார்த்திகேயன்.. சுயநலமாக மாவீரனுக்கு ஆப்பு வைத்த ரெட் ஜெயண்ட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படம் படு தோல்வியை சந்தித்ததால். அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படத்தை தான் மலை போல் நம்பி இருக்கிறார். ஆனால் அந்தப் படத்திற்கும் இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆப்பு வைத்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் தற்போது பெரும் மன கலக்கத்துடன் இருக்கிறார்.

பண்டைய காலத்தில் வீரன் பெரியவரா? மன்னன் பெரியவரா? என்று கேட்டால் மன்னன் தான் பெரியவர் என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலை தான் இப்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. காரணம் உதயநிதியின் மாமன்னன் தான். இப்போது உதயநிதி முழு நேர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டார்.

Also Read: ரெட் ஜெயன்ட் சொத்து மதிப்பு 2000 கோடியா.? ஷாக்காகி பதிலடி கொடுத்த உதயநிதி

இருப்பினும் அவருடைய நடிப்பில் கடைசி கடைசியாக வெளியாக இருக்கும் படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை வரும் மே மாத கடைசியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.

ஆனால் இறுதி கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் மே மாதம் படத்தை வெளியிட வாய்ப்பு இல்லை என்று இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லிவிட்டார். அவரது யோசனையை ஏற்ற தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தினை ஜூன் மாத கடைசியில் ரிலீஸ் செய்யும் முடிவில் உள்ளனர்.

Also Read: ரெட் ஜெயன்ட் படங்களை தூக்கும் ரகசியம் இதுதான்.. விஜய் படமாவே இருந்தாலும் எங்களுக்கு இதுதான் முக்கியம்

எனவே மாமன்னன் ஜூன் மாதம் வெளியிடுவதால், அப்போது வெளியாக திட்டமிட்டு இருந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை ஜூலை கடைசிக்கு மாற்றி வைத்திருக்கின்றனர். ஏனென்றால் மாவீரன் படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே வெளியிடுவதால் தான் இந்த தள்ளிவைப்பு நிகழ்ந்துள்ளது.

அதாவது உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் மாமன்னன் என்பதால் அந்தப் படத்தை வேறு எந்த படத்துடனும் போட்டி போட விட விரும்பவில்லை. தனிக்காட்டு ராஜாவாகவே உதயநிதியின் மாமன்னன் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் போகின்றனர். அதனால் தான் இப்போது உதயநிதி ஸ்டாலினுக்காக சிவகார்த்திகேயனை பலி கிடாவாக மாற்றி விட்டனர்.

Also Read: 500 கோடி பிரீ பிஸ்னஸ் ஆனதெல்லாம் பத்தாது.. ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் தஞ்சமடைந்த லியோ படக்குழு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்