18 வயது நடிகைக்கு கொக்கி போடும் சிவகார்த்திகேயன்.. 20 வயது வித்தியாசம் ஓவரா தெரியலையா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த இரண்டு படங்களான டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்ததால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கெல்லாம் கடும் போட்டியான ஹீரோவாக மாறி இருக்கிறார். தற்போது இவர் நடிக்கும் படங்களுக்கு இந்த ஹீரோயின் தான் வேண்டும் என அடம் பிடித்து கேட்டு வாங்குகிறாராம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ராஜ் குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அயலான் திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் அயலான் திரைப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் தயாரிப்பில் மாவீரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயனின் 21-வது படமான மாவீரன் படத்தில் இவர் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க படக்குழு திட்டமிட்டு இந்தியாவின் பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு பிறகு மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.

கீர்த்தி ஷெட்டி விஜய் சேதுபதி நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் தனக்கு 18 வயது நடிகை தான் வேண்டும் என அடம் பிடித்ததாக கூறுகின்றனர். அதனால்தான் கீர்த்தி ஷெட்டி படத்தில் கமிட் செய்ததாக பலரும் கூறிவருகின்றனர். கீர்த்தி ஷெட்டியை விட சிவகார்த்திகேயன் 20 வயது அதிகமானவர் என்பதால் அதை வைத்து ரசிகர்கள் கலாய்கின்றனர்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -