புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பட வாய்ப்புக்காக நரி தந்திரமாக செயல்பட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே படத்தில் உச்சத்தை தொற்றலாம்னு நினைப்பு

சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் நுழைந்து கொஞ்ச காலங்கள் ஆகியிருந்தாலும், குறைந்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். ஒரு நடிகராக என்ன செய்ய வேண்டும் என்று பல்வேறு யுக்திகளை யோசித்து இன்று சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கிறார். இவர் யார் என்று சின்ன குழந்தைகள் முதல் தெரிந்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக பிரபலம் ஆகிவிட்டார்.

அத்துடன் இதற்கு மேலேயும் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்று படாத பாடு பட்டு வருகிறார். அதற்காகவே சில தந்திரமான செயல்களை கமுக்கமாக இருந்து செய்கிறார். பொதுவாகவே ஒரு படத்தில் கமிட் ஆகும்போது அந்த நடிகருக்கான சம்பளத்தை திட்டவட்டமாக பேசி முடிவு செய்து கொள்வார்கள்.

Also read: அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டாங்க.! விஜய்யை பார்த்து கூட திருந்தாத சிவகார்த்திகேயன், தனுஷ்

அப்படி இருக்கையில் இவர் சற்று வித்தியாசமாக ஒரு விஷயத்தை கையாளுகிறார் என்றே சொல்லலாம். அதாவது இவரின் அடுத்த படத்தை இயக்குவதற்காக ஏ ஆர் முருகதாஸ் அவரிடம் கதை சொல்லி இருக்கிறார். இவரும் ஈசியாக வந்து அவரை தேர்ந்தெடுக்கவில்லை. சிவகார்த்திகேயனுக்கு முன்னதாகவே இந்த கதையை பல ஹீரோக்களிடம் சொல்லி இருக்கிறார்.

ஆனால் எந்த நடிகரும் இந்த கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பல போராட்டத்திற்குப் பிறகு தான் சிவகார்த்திகேயனிடம் கதையை சொல்லி ஒரு வழியா சம்மதமும் வாங்கிவிட்டார். இப்பொழுது இவர்கள் கூட்டணியில் இந்த படத்திற்கான இசையமைப்பாளராக அனிருத் முடிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரிக்கிறார்.

Also read: பாபா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள அனிருத்.. இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்

அத்துடன் இந்த படத்திற்காக ஒரு புது விதமான ஒப்பந்தத்தை பட குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். அதாவது படத்தை ஆரம்பித்த பின் அது நன்றாக முடியவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதால் சிவகார்த்திகேயன் சம்பளத்தில் 5 கோடியை குறைத்து இருக்கிறார். இவர் மட்டும் இல்லாமல் இவரை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் மற்றும் அனிருத்தும் சம்பளத்தை குறைத்து வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் எதற்காக என்றால் இந்தப் படத்தை எப்படியாவது முடித்து வெளியிட்டு விட்டால் பல வருடங்களாக போராடி வந்த ஏ ஆர் முருகதாஸுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும். மற்றும் சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்துக்கு வந்துவிடலாம் என்ற ஆசையில் தான் இந்த மாதிரியான விஷயங்களில் இறங்கி உள்ளார்கள். இப்படி இவர்கள் எதிர்பார்த்தபடி இந்த படம் வெற்றிகரமாக அமைந்தால் எல்லாம் சரிதான்.

Also read: பணத்திமிரை காட்டிய சிவகார்த்திகேயன் பட நடிகை.. மொத்த கேரியரே போய்விடும் என கெஞ்சும் நிலைமை

- Advertisement -

Trending News