Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாபா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள அனிருத்.. இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அன்று இருந்த அதே ரசிகர் கூட்டம் இன்றும் இருக்கிறது தான் ஆச்சரியம்.
ஒவ்வொரு பட வெளியீடும் திருவிழாபோல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வயதிலும் இப்படி ஒரு காந்தத் தன்மையை வைத்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருவது உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது.
ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரும்பாலான படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. அந்த படங்களில் பாபா படமும் ஒன்று.
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என பேசி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ரஜினிகாந்த் அப்படிப் பண்ணியது இதுதான் முதல் முறை. ரஜினி சொந்த தயாரிப்பில் தயாரித்த திரைப்படம் பாபா.
இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கவுண்டமணியின் காமெடி அல்டிமேட் ஆக இருக்கும். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த பாபா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாபா அறிமுக பாடலில் அனிருத் சிறுபிள்ளையாக நடித்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

baba-aniruth-appearance
அனிருத் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
