ஐபிஎஸ் சந்தியா விரித்த வலை.. மாட்டிக்கிட்டியே பங்கு

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா, தன்னுடைய வீட்டிலேயே இருக்கும் பொறுக்கியை கையும் களவுமாக பிடித்து கொடுக்கிறார். அதாவது சிவகாமியின் இளைய மகன் ஆதி, ஜெசி என்ற பெண்ணை காதலித்து அவரை ஏமாற்றி இருக்கிறார்.

இதனால் திருமணத்திற்கு முன்பே ஜெசி கர்ப்பமாக இருப்பதால் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி ஆதியிடம் ஜெசி கெஞ்சுகிறார். ஆனால் தனக்கும் ஜெசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குடும்பத்தின் முன்னிலையில் ஆதி சத்தியம் செய்கிறார்.

Also Read: சஞ்சீவ்-ஆலியாவை தொடர்ந்து ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்

இதை சிவகாமியும் நம்புகிறார். ஆனால் சந்தியாவிற்கு அர்ச்சனா மூலமாக ஜெசி-ஆதி காதல் விவகாரம் தெரிய வருகிறது. ஆகையால் ஆதியை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். குடும்பத்தின் முன்னிலையில் ஆதி எப்படிப்பட்டவர் என நிரூபிக்க வேண்டும் என்பதற்காக சந்தியா ஆதிக்கு ஒரு வலை விரிக்கிறார்.

ஆதிக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். ஆதி பெண்ணுபார்க்க வந்த பெண், ஆதியிடம் தனியாக பேச வேண்டும் என ஒரு ரூமுக்கு அழைத்து செல்கிறார். அந்த ரூமில் ஜெசியும் இருக்கிறார். அந்த சமயம் ஜெசி ஆதியிடம் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன பதில் என்று கேட்கிறார்.

Also Read: 17 அரியர் வைத்த விஜய் டிவி பிரபலம்

அதற்கு ஆதி, ‘நீ கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை முதலில் என்னிடம் வந்து சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லி இருந்தால் என்னுடைய அம்மாவிடம் சமயம் பார்த்து பேசி சம்மதம் வாங்கி இருப்பேன். இப்போது பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை.

கருவில் இருக்கும் குழந்தையை கலைத்துவிடு என ஆதி கேவலமாக பேசுகிறார். இதை வீட்டில் இருக்கும் அனைவரும் கேட்கும் படியும், பார்க்கும் படியும் சந்தியா ஏற்பாடு செய்திருந்தார். இதனால் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஆதி குடும்பத்தின் முன்னிலையில் அசிங்கப்பட்டு நின்றார்.

Also Read: ராஜா ராணி-2 வேலைக்கார பொண்ணு மயிலா இது

பிறகு சிவகாமி ஆத்திரத்தில் ஆதியை சரமாரியாக அடிக்கிறார். சிவகாமி தன்னுடைய மகன் செய்த தவறுக்காக ஜெசி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதுடன் ஜெசியை தன்னுடைய மூன்றாவது மருமகளாக ஏற்றுக்கொள்கிறார்.

- Advertisement -