ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய் டிவி சீரியல் ஹீரோயின் உடன் நிச்சயதார்த்தம்.. வருங்கால மனைவியை அறிமுகம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் முத்து

Siragadikka Aasai: விஜய் டிவியின் டி ஆர் பி ரேட்டிங்கில் எப்போதுமே முதலிடத்தில் இருக்கும் சீரியல்தான் சிறகடிக்கும் ஆசை. முத்து மற்றும் மீனாவின் காதல் கெமிஸ்ட்ரி, விஜயாவின் மாஸ் ஆன வில்லத்தனம் என இந்த சீரியலுக்கு எல்லாமே பாசிட்டிவ் தான்.

அது மட்டும் இல்லாமல் ரோகினியின் கடந்த கால வாழ்க்கையை பற்றி முத்து எப்படியாவது கண்டுபிடித்து அதை விஜயாவிடம் சொல்ல வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு அந்த சீரியல் ரசிகர்களின் பெரிய ஆசையாக இருக்கிறது.

இந்த சீரியலில் ஹீரோ முத்து கேரக்டரில் நடிப்பவர்தான் நடிகர் வெற்றி வசந்த். இவருடைய இந்த சீரியலின் மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்கிறது. பெரும்பாலும் சீரியல்கள் என்றால் அதன் ஹீரோயின்கள் தான் பெரிய அளவில் கொண்டாடப்படுவார்கள்.

ஆனால் வெற்றிவசல் பெண் ரசிகைகள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறார். வெற்றிவசன் இன்று தன்னுடைய வாழ்க்கையின் முக்கிய தருணத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது தனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.

விஜய் டிவி சீரியல் ஹீரோயின் உடன் நிச்சயதார்த்தம்

இதில் பெரிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவது விஜய் டிவியின் சீரியல் நடிகை தான். விஜய் டிவியின் நிறைய தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவி சுந்தர் தான் சிறகடிக்க ஆசை சீரியலின் ஹீரோ வெற்றி வசந்தின் வருங்கால மனைவி.

வைஷ்ணவி சுந்தர் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவின் தங்கையாக நடித்தவர். இவருக்கு அந்த சீரியலில் காதலில் பிரச்சினை ஏற்பட்டு அதிலிருந்து ஹீரோயின் சந்தியா அவரை காப்பாற்றுவது போல் கதைக்களம் நகரும்.

ராஜா ராணி சீரியலை தொடர்ந்து வைஷ்ணவி பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்டிக்கான ஒரு நடனத்துடன் தங்களுடைய நிச்சயதார்த்த அறிவிப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

காதலிப்பதை ஊரைக் கூட்டி அறிவித்துவிட்டு பின்னர் சைலன்டாக பிரேக் அப் செய்து கொள்ளும் நட்சத்திரங்களிடையே இத்தனை நாள் தங்களுடைய காதலை ரகசியமாக வைத்துக் கொண்டு தற்போது நிச்சயதார்த்தம் வரை வந்திருக்கிறது இந்த அழகான காதல் ஜோடி.

- Advertisement -

Trending News