ஒரு ஜான் ஏறினால் மூன்று அடி சறுக்கும் சிம்பு.. திருந்திய பின்பும் வந்த பேராசையால் வேதாளமாய் மாறும் எஸ் டி ஆர்

Simbu’s Worst behaviour: சிம்புவிற்கு சரியான கம் பேக் படமாக வெங்கட் பிரபுவின் மாநாடு படம் அமைந்தது. அதன் பின் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி சினிமா துறையில் நல்ல பெயர் சம்பாதித்து வந்தார் .மாநாட்டுக்குப் பின் படங்கள் ஓடாவிட்டாலும் தன்னுடைய கேரியரில் உச்சத்தில் தான் இருந்தார்.

வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து பல படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்சமயம் எஸ்டிஆர் 48, மணிரத்தினத்தின் தக்லைப் போன்ற படங்கள் இவர் கைவசம் இருக்கிறது. இந்த படத்தில் வழக்கத்துக்கு மாறாக சிம்பு அதிகாலையிலேயே சூட்டிங் ஸ்பாட் வந்து விடுவதும், இரவு வரை கலந்து கொள்வதுமாய் இருந்துள்ளார்

எல்லாரிடமும் நல்ல பெயர் சம்பாதித்து வந்த சிம்பு இப்பொழுது மீண்டும் பேராசையால் தன் பெயரை கெடுக்க தொடங்கி விட்டார். தயாரிப்பாளர் ஐசரி கணேசிற்கு இரண்டு படங்கள் பண்ணிக் கொடுப்பதாக அக்ரிமெண்ட் போட்டு இருக்கிறார் சிம்பு. இந்த பஞ்சாயத்து இன்னும் இழுவையில் இருந்து வருகிறது.

திருந்திய பின்பும் வந்த பேராசையால் வேதாளமாய் மாறும் எஸ் டி ஆர்

பொதுவா சிம்பு நம்ம படம் என்ன பிசினஸ் ஆகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்றெல்லாம் யோசிப்பதே கிடையாது எனக்கு இவ்வளவு கோடிகள் சம்பளம் வேண்டும் என அடம்பிடித்து வருகிறார். அந்த ஹீரோக்கு கொடுக்குறீங்க, நான் சளைத்தவன் இல்லை எனக்கும் கொடுங்கள் என அடம்பிடித்து வருகிறார்

இப்பொழுது சிம்பு கேட்கும் சம்பளத்தால் மொத்த கோடம்பாக்கமும் ஆடிப் போயிருக்கிறது. எப்பொழுதுமே சிம்பு தன்னுடைய போட்டியாளராக தனுஷை தான் பார்க்கிறார். தனுஷ் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற கணக்கில் 50 நாள் கால் சீட் கொடுப்பதற்கு 50 கோடிகள் சம்பளம் வாங்குகிறார்.

தனுசை போல் சிம்புவும் இப்பொழுது 50 முதல் 55 கோடிகள் வரை சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்.இதனாலேயே இவரை கமிட் செய்ய தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர். ஏற்கனவே கொரானா குமார் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் இழுவையில் இருக்கிறது. இந்த பஞ்சாயத்தே இன்னும் ஓயாத நிலையில் ஐசரி கணேஷ் தலைக தான் உருண்டு வருகிறது

Next Story

- Advertisement -