ரெட் கார்ட்டுக்கு பயந்து இறங்கி வந்த சிம்பு.. சாமர்த்தியமாய் பணிய வைத்த தயாரிப்பாளர்

Actor Simbu: சினிமாவில் இடைவெளி விட்டு காணப்பட்ட சிம்பு ரீ என்ட்ரியில் மாஸ் காட்டி வருகிறார். அதை தொடர்ந்து இவரை வைத்து படம் உருவாக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.

அவ்வாறு சிம்பு ரீ என்ட்ரியில் கலக்கிய படம் தான் வெந்து தணிந்த காடு மற்றும் மாநாடு. அதைத்தொடர்ந்து மாறுபட்ட பரிமாணத்தில் இவரின் பத்து தல படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மேற்கொள்ள இருக்கும் படம் தான் எஸ் டி ஆர் 48.

Also Read: தேடிவந்த வாய்ப்பை உதாசீனப்படுத்திய நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த ஹீரோயின்

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இதில் சிம்பு இரு கதாபாத்திரம்  ஏற்பதாக கூறப்படுகிறது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. மேலும் இப்படம் ஆக்சன் திரில்லர் படம் என்பதால் சிம்புவின் முயற்சி பெரிதாய் எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சமீபத்தில் இவர் மீது படங்களில் கமிட்டாகி, படப்பிடிப்பை மேற்கொள்ளாமல் தாமதம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவை தயாரிப்பாளர் சங்கத்திடம் வரை சென்று விட்டது. இதைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் சிம்புவை வன்மையாக சாடியது மட்டுமல்லாது ரெட் கார்டு கொடுக்கும் நிலைமையில் இருந்தார்கள்.

Also Read: டிரஸ் வாங்க கூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டு ஜெயித்த நடிகை.. விவாகரத்து செய்ய வைத்த ஒல்லி நடிகர்

சமீபத்தில் இது போன்ற பிரச்சனைகள் சுமமாக பேசப்பட்டு, வரும் படங்களை எந்த ஒரு இடையூறும் இன்றி சிம்பு தொடங்கலாம் என ஐசரி கணேஷ் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் அதைத் தொடர்ந்து அடங்கமறு பட இயக்குனரான கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தை வேல்ஸ் தயாரிப்பை மேற்கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பு ஏ ஆர் ரகுமான் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு மாஸ் கூட்டணியில் உருவாகும் இப்படம்  சிம்புவிற்கு அடுத்த கட்ட பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் நிலையில், இப்படத்திற்கான சிம்புவின் சம்பளம் குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதன் பின் தான் இப்படத்திற்கு அக்ரிமெண்ட் போடப்படும் என கூறப்படுகிறது.

Also Read: சிவகார்த்திகேயன் போல் வளர வேண்டிய நடிகர்.. கேடு கெட்ட பழக்கத்தினால் இடம் தெரியாமல் போன பரிதாபம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்