சிவகார்த்திகேயன் போல் வளர வேண்டிய நடிகர்.. கேடு கெட்ட பழக்கத்தினால் இடம் தெரியாமல் போன பரிதாபம்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்திருந்தாலும் இந்த உயரத்தை அடைய அவரது திறமை முக்கிய காரணம். அதன் பின்பு அதை தக்க வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அதன்படி இப்போது அயலான், மாவீரன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனைப் போலவே சினிமாவில் வளர்ந்திருக்க வேண்டிய நடிகர் ஒருவர் கெட்ட பழக்கத்தினால் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு போய் உள்ளார்.

Also Read : 3 வருட கேப், தளபதி இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் போட்ட பலே திட்டம்.. அதிரடியாக தொடங்கப்பட்ட SK21

அதாவது சினிமாவில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு கதாநாயகனாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. களவாணி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் விமல். அதன் பின்பு சிவகார்த்திகேயன் உடனே இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் நடித்திருந்தார்.

கலகலப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் அதன் பிறகு கதை தேர்வில் செதப்பிவிட்டார். அதன் பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் தொடர் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக தானே படத்தை தயாரிக்கலாம் என வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி படத்தை தயாரித்தார்.

Also Read : சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல, ரஜினியே தான்.. மிஷ்கின் பேச்சுக்கு ப்ளூ சட்டை பதில்

அந்த படமும் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் கடன், வட்டி என விமலை போட்டு வாட்டியது. ஆரம்பத்தில் குறைவாக குடித்துக் கொண்ட இவர் இந்த பிரச்சனையினால் முழு வேலை குடிகாரனாகவே மாறிவிட்டார். மேலும் சினிமாவில் விமல் உச்சத்தில் இருந்த போது தனது மாமன் மகளை காதலித்து ஓடி வந்த திருமணம் செய்து கொண்டார்.

விமலின் மனைவியோ டாக்டருக்கு படித்தவர். அப்போது நிறைய உதவிகள் பொது மக்களுக்கு செய்திருக்கிறார். இந்நிலையில் விமலின் இந்த நடவடிக்கையை பார்த்து வெறுத்துப் போன அவர் தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்று விட்டாராம். இப்போது பிழைப்புக்கு வழியில்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் விமல் இருந்து வருகிறார்.

Also Read : சிவகார்த்திகேயன் ஒரு குட்டி ரஜினி.. மேடையில் சொம்படிக்கும் ரஜினி பட வில்லி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்