கமலஹாசன் போல் பல கெட்டப்பில் நடிக்கும் சிம்பு.. ஆஸ்கரை உறுதிசெய்யும் அடுத்த படம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல கலைகளை கற்று கொண்டு சினிமாவில் கால் பதித்த குழந்தை நட்சத்திரம் சிம்பு இன்று அவர் மிகப்பெரிய கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும். இவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது ஆனால் இவர் தைரியமாக பேசுவதால் மட்டுமே இவர் பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்.

இவர் பல வருடங்களாக நடிக்காமல் இருந்து சாப்பிட்டு உடம்பை குண்டாக மாற்றிக் கொண்டும் ஊர் சுற்றிக் கொண்டும் இருந்து வந்தார். பல பேர் இனிமேல் சினிமாவில் சிம்பு வர முடியாது என்று கேலி செய்தனர். அதனை மாற்றி வேகவேகமாக என்னால் வளர முடியும் என்று பழைய சிம்புவாக மாறி வந்துள்ளார். வந்த வேகத்தில் மாநாடு படம் இவருக்கு மிகப்பெரிய வசூலையும், வெற்றியையும் கொடுத்தது. அடுத்ததாக வெளிவந்த வெந்து தணிந்தது காடும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

Also Read : சிம்பு இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிவகார்த்திகேயன்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு

அனைவரும் எதிர்பார்க்கும் பத்துதல திரைப்படம் பல வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. எப்படியோ இந்த வருட இறுதியில் வெளியாக உள்ளது. ஆனால் இந்த படத்தில் எப்போதும் போல சிம்பு தாடி வைத்து நடித்துள்ளார். சிம்பு எப்பொழுதும் பல கெட்டப்புகளில் நடித்து வருபவர். இந்த படத்தின் சில தகவல்கள் கசிந்துள்ளது இதில் அவர் பத்து விதமான கெட்டப்பில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதாவது தசாவதார படத்தில் கமல் கெட்டப் போல் இதிலும் இருக்கும் என்று சில பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தில் எந்த ஒரு விஷயமும் இதுவரை வெளிவராமல் பல வருடங்கள் ரகசியமாக வைத்துள்ள இந்த விஷயம் வெளிவந்தது படக்குழுவிற்கு சில சங்கடங்களை உருவாக்கி உள்ளது. இந்த படத்துக்கு இது ப்ரமோஷனாக கூட அமையும், எப்போது வெளிவரும் என்ற எண்ணத்தை இப்பொழுதே அது கொண்டு வந்துள்ளது.

Also Read : தேசிய விருது நடிகையுடன் ஜோடி போடும் சிம்பு.. மாஸானா இயக்குனருடன் கூட்டணி

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், சிம்பு தாதாவாகவும் அதாவது வில்லன் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் இவர் ஹீரோவாக நடித்தால் மட்டுமே இந்த படத்தில் மதிப்பு உயரும் ஆகையால் சில விஷயங்களை ரகசியமாக வைத்து வந்த படக்குழு இப்போது இவர்தான் ஹீரோ, வில்லன் எல்லாம் கலந்த கலவையாக இருக்கப் போகிறார் என்ற செய்தி மட்டும் உறுதியாகிறது.

இந்த வருடத்தில் 4 படங்கள் வெளிவந்தது, அதில் இப்பொழுது மூன்றில் 2 படம் வெற்றி இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றால் அசைக்கமுடியாத முக்கியமான கதா நாயகனாக தமிழ் சினிமாவில் இனிமேல் சிம்பு வலம் வருவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் வருகிறது. இவர் அடுத்தடுத்து பெரிய படங்கள் நடித்து இந்தியளவில் பல வெற்றிகளை கொடுக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் சினிமா வளரும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

Also Read : சிம்பு படத்தில் முக்கிய வில்லனாக நடித்த நடிகர்.. ஆனா தனுஷோட தீவிர ரசிகனாம்

Next Story

- Advertisement -