ஏழு மாதங்களாக ஏங்கி கிடக்கும் சிம்பு.. செகண்ட் இன்னிங்ஸ் கேரியருக்கு வரப் போகும் பெரிய ஆபத்து

Actor Simbu: பொதுவாகவே சிம்பு நிறைய பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் போன்ற விஷயங்களில் சிக்கி தவித்து வந்தவர். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக சமீபத்தில் இவர் நடித்த படங்களின் மூலம் வெற்றியை கொடுத்து இவருடைய செகண்ட் இன்னிங்ஸ் கேரியரை தூக்கி நிறுத்திவிட்டார்.

இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு பல படங்களில் நடித்து இன்னும் ரசிகர்களை இவர் பக்கம் திருப்புவார் என்று எதிர்பார்த்து நிலையில், இவருடைய கேரியரில் எந்த ஒரு ஸ்டெப்பும் முன்னேறாமல் விட்ட இடத்தில் இருந்து தத்தளித்துக் கொண்டே இருக்கிறார்.

Also read: முன்னாள் காதலியை காட்டி கதி கலங்க வைத்த 5 படங்கள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

அதாவது கடந்த வருடம் டிசம்பர் மாதம் பத்துதல படத்தின் சூட்டிங் முடிந்து விட்டது. அதன் பின் நிறைய படங்களில் கமிட்டாய் இருக்கிறார். அதிலும் கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் பண்ணப் போகிறார் என்ற நிறைய பேச்சுக்கள் அடிபட்டது.

ஆனால் அது வெறும் பேச்சாகவே தற்போது வரை இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக கேமரா முன்பு நிற்கவில்லை. அதாவது ஒரு வெற்றியை அடைவது தான் ரொம்பவே கஷ்டம், அதை அடைந்து விட்டால் அந்த வெற்றியை பிடித்துக் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடி வந்தால் தான் நம்மால் நிலைத்து நிற்க முடியும்.

Also read: கம்பேக்கில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 5 ஹீரோக்கள்.. 10 வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுத்த சிம்பு

அந்த வகையில் சிம்பு வெற்றியை பார்த்த பிறகு தொடர்ந்து நடித்தால் மட்டும்தான் இவரால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். அதை விட்டுவிட்டு கொஞ்சம் இடைவெளி எடுத்தால் செகண்ட் இன்னிங்ஸில் வெற்றி பெற்றும் பிரயோஜனம் இருக்காது. எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு இப்பொழுது தான் சற்று தலை தூக்கி வருகிறார்.

ஆனால் அதற்குள் இவருடைய சினிமா கேரியருக்கு ஆபத்தாக திக்கு திசை தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார். இவர் ஒழுங்காக இருந்தாலும் இவருடைய கிரகம் இவரை சும்மா விடுவதாக தெரியவில்லை. இதையெல்லாம் தகர்த்தெறிந்து படபிடிப்பு ஆரம்பித்தால் மட்டுமே இவரால் ஹீரோ இமேஜை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் மறுபடியும் மீண்டு வருவது ரொம்பவே கடினமானது.

Also read: கமலுக்காக உருமாறும் சிம்பு.. 100 கோடியில் செய்யப் போகும் சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்