லோகேஷ் யுனிவர்சலில் இணையும் சிம்பு.. மீண்டும் ஒரு தொட்டி ஜெயா

லோகேஷ் தன் படத்தில் உள்ள கதாபாத்திரங்களை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார். லோகேஷ் யுனிவர்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இதில் பல நடிகர்கள் இணைந்துள்ளார்கள். அந்த வகையில் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து தளபதி 67 படம் உருவாக உள்ளது.

லோகேஷின் முந்தைய படங்களில் உள்ள கதாபாத்திரங்கள் இடம்பெறும் என ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறார்கள். இந்நிலையில் சிம்பு லோகேஷ் யுனிவர்சில் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சிம்பு தற்போது பத்துதல படத்தை முடித்துள்ளார்.

Also Read : லோகேஷ் படத்தில் ராகவா லாரன்ஸ்.. பிரம்மாண்ட முறையில் உருவாகும் புது கூட்டணி.!

இதைத்தொடர்ந்து மற்ற இயக்குனர்களுடன் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய்க்காக வாரிசு படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடி இருந்தார். ஆனால் அப்போதே வாரிசு படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறார் என்று ஒரு வதந்தி பரவியது. ஆனால் தளபதி படத்தில் சிம்பு நடிப்பது உண்மை தான்.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கம் தளபதி 67 படத்தின் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. சமீபத்தில் மிஸ்கின் இயக்கம் படத்திற்காக சிம்பு சண்டைக் காட்சி பயிற்சி எடுப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வந்தது.

Also Read : தளபதி 67 ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜயின் வலது கை.. பூஜை நாட்களை டார்கெட் செய்து கல்லா கட்டும் லோகேஷ்

அந்த பயிற்சி மிஷ்கின் படத்திற்காக இல்லையாம், தளபதி 67 படத்திற்காக தான் பயிற்சி எடுத்து வருகிறாராம். மேலும் சிம்புவின் கேரியரில் தொட்டி ஜெயா கதாபாத்திரம் தற்போது வரை அவரது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. ஆகையால் தொட்டி ஜெயா கதாபாத்திரத்தை மிஞ்சும் அளவிற்கு தளபதி 67 இல் சிம்புவின் கதாபாத்திரம் அமைய உள்ளது.

மேலும் லோகேஷ் யுனிவர்ஸ் மூலம் விஜய் மற்றும் சிம்பு முதல் முறையாக இணைவதால் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் பிப்ரவரி மாதத்தில் படத்தை குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாக உள்ளது.

Also Read : சிம்புவின் 50வது படத்தை இயக்கப் போகும் அதிர்ஷ்டசாலி.. மாஸ் காம்போவில் உருவாகும் படம்

- Advertisement -spot_img

Trending News