ஒரே பட வெற்றியால் சம்பளத்தில் கறார் காட்டும் சிம்பு.. விழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. வித்தியாசமான கதையமைப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை குவித்த படமாகவும் இது இருந்தது. கடந்த வருடம் 100 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படங்களில் இப்படமும் ஒன்று. இதனால் மாநாடு திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியால் தனது சம்பளத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளார். தற்போது அவர் தன்னை அணுகும் தயாரிப்பாளர்களிடம் 25 கோடி சம்பளம் கேட்டு வருகிறார். இது தயாரிப்பாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த திரைப்படங்களில் எல்லாம் அவர் இதற்கு முன்பு பெற்ற சம்பளத்தையே கேட்டுள்ளார். ஆனால் இனி அவர் நடிக்கப் போகும் திரைப்படங்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை எதிர்பார்க்கிறார்.

இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் அவரிடம் சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டுள்ளார்கள். ஆனாலும் அவர் 20 கோடி கொடுப்பதாக இருந்தால் நான் படத்தில் நடிக்கிறேன் என்று கறாராக சொல்கிறாராம்.

சம்பள விஷயத்தில் இவ்வளவு கறாராகப் பேசும் சிம்புவால் தயாரிப்பாளர்கள் செய்வதறியாது இருக்கிறார்கள். மேலும் சிம்புவை போலவே மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரும் தங்கள் சம்பளத்தை வெகுவாக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்