சிம்பு கல்யாணத்துக்கு போடுற அந்த ஒரு பலமான கண்டிஷன்.. வலை வீசி தேடும் TR

Simbu marriage: தமிழ் சினிமா நடிகர்களில் 40 வயதை தாண்டியும் கல்யாணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் என்று சொல்லி ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் ரொம்ப பழைய பீசான பிரேம்ஜிக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் ஆகிவிட்டது.

இதனால் அடுத்து சிம்பு மற்றும் விஷால் போன்றவர்கள் எப்போதான் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. விஷால் ஒரு பக்கம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் கல்யாணம் நடக்கும் என்று இந்தக் கேள்விக்கு விடை சொல்லிவிட்டார்.

ஆனால் இதில் சிம்பு எந்த கேட்டகிரி என்றே தெரியவில்லை. அவருடைய அப்பா டி ராஜேந்தர் மீடியா முன்பு தன் மகனுக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது தனக்கு பெரும் இயக்கத்தை கொடுத்திருப்பதாக வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

அப்பா வெளிப்படையாக பேசியும் சிம்புவிடமிருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை. தொடர்ந்து காதல் தோல்வி அடைந்ததால் சிம்பு திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாரா என்ற கேள்வி கூட எழுந்திருக்கிறது.

சிம்பு அவ்வப்போது சில நடிகைகளுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டாலும் எல்லோருக்கும் தெரிந்த உறுதியான காதல் என்றால் அது நயன்தாராவுடன் தான். கிட்டத்தட்ட திருமணம் வரைக்கும் வந்து இந்தக் காதல் தோல்வி அடைந்தது.

பல மேடைகளில் இந்த தோல்வியை பற்றி வெளிப்படையாகவே சிம்பு பேசியிருக்கிறார். அதன் பிறகு ஹன்சிகாவுடன் ஒரு குறுகிய கால காதலும் இருந்தது. அந்த காதல் தோல்வி அடைந்த பிறகு தான் சிம்பு ஆன்மீகத்திற்கு போகிறேன் என காவி சட்டை போட்டுக் கொண்டு எல்லாம் போனது.

அதன் பிறகு அதிக உடல் எடை போட்டு, ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ளாமல் மொத்தமாக பெயரை கெடுத்துக் கொண்டார். இழந்த பெயரை திரும்ப வாங்க மீண்டும் பீனிக்ஸ் பறவையாக களம் இறங்கிய சிம்புவுக்கு இப்போது வெற்றி பாதை தான்.

சிம்பு கல்யாணத்துக்கு போடுற அந்த ஒரு பலமான கண்டிஷன்

இருந்தாலும் இன்று வரை கல்யாணத்திற்கு ஓகே சொல்லாமல் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவர் போட்டிருக்கும் ஒரு கண்டிஷன் தான். அதாவது சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண் அவரை டாமினேட் செய்யும் விதமாக இருக்க வேண்டுமாம்.

மனைவி சொல்லை கேட்டு அவர் வழியில் நடக்க சிம்பு ஆசைப்படுகிறாராம். மனைவியுடன் சேர்ந்து தனக்கான வெற்றிப் பாதையை உருவாக்கத்தான் சிம்புவின் பெரிய கனவாக இருக்கிறதாம். அப்படி ஒரு பெண்ணை பாருங்கள் உடனே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறாராம்.

தன்னை டாமினேட் செய்யும் பெண்ணை சிம்பு எதிர்பார்க்கிறார் என்றால் ஒருவேளை நயன்தாரா குணத்தில் இருக்கும் ஒரு பெண் தான் வேண்டும் என மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ.

கோலிவுட்டில் கலக்கும் சிம்பு

Next Story

- Advertisement -