மீண்டும் சேட்டையை ஆரம்பித்த சிம்பு.. ஆண்டவருக்கே அடிக்கும் விபூதி

Actor Simbu: பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்த சிம்பு இப்போதுதான் ஓரளவுக்கு நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து கமல் கூட்டணியில் இவர் இணைந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் எஸ் டி ஆர் 48 படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ஆனால் படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிம்புவை சுற்றி இருக்கும் பிரச்சனை தான்.

Also read: கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

அதாவது சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் தான் அடுத்ததாக நடிக்க இருந்தார். ஆனால் திடீரென கமல் படத்தில் கமிட் ஆனதால் எங்கள் படத்திற்கு முதலில் நடித்து கொடுத்து விட்டு போங்கள் என சிம்புவுக்கு அவர்கள் செக் வைத்தனர். அதைத்தொடர்ந்து பிரச்சனை நடிகர் சங்கம் வரையிலும் சென்றது.

இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஐசரி கணேஷ் எங்கள் பிரச்சனையை நாங்களே தீர்த்துக் கொண்டோம் என்று கூறினார். இதனால் சிம்பு கமல் படத்தில் தடையில்லாமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Also read: 72 வயதிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் முத்துவேல் பாண்டியனின் 5 சாதனைகள்.. ரிலீஸ்க்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துரும் போல

ஆனால் சிம்பு படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்கிறேன் என மாத கணக்கில் இழுத்தடித்து வருகிறாராம். தற்போது அவர் அதற்கான பயிற்சியில் நாளை கடத்திக் கொண்டிருக்கிறார். மேலும் இப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்.

அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவே இவ்வளவு மெனக்கெட்டு வருகிறாராம். அதனாலயே இப்படம் இன்னும் தொடங்கப்படாமல் காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் இயக்குனர் தான் பாவம் நொந்து போய் இருக்கிறாராம். அந்த வகையில் மீண்டும் சேட்டையை ஆரம்பித்துள்ள சிம்பு ஆண்டவருக்கே விபூதி அடித்து வருகிறார்.

Also read: 18 வயசு காலேஜ் ஸ்டுடென்ட் போல் மாறிய சிம்பு.. சோசியல் மீடியாவை திக்கு முக்காட வைக்கும் புகைப்படம்

Next Story

- Advertisement -