Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்புவுக்கு வில்லனாகும் சிம்புவின் சூப்பர் ஹிட் பட இயக்குனர்.. எதிர்பார்ப்பை கிளப்பும் அடுத்த படம்
தமிழ் சினிமாவில் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற பெயருக்கு முழுவதும் பொருத்தமானவர் நடிகர் சிம்பு. இவரை கெட்டவன் என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் உள்ளது என்றால் நல்லவன் என்று சொல்வதற்கு மற்றொரு கூட்டம் உள்ளது.
திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும், யார் என்ன சொன்னாலும் சிம்புவை கை விடாமல் சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஏன் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் இருந்தாலும் சிம்பு ரசிகர்கள் அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை வைத்துதான் வருகின்றனர்.
தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்தி இணைந்து நடிக்கும் பத்து தல படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபிலி என் கிருஷ்ணா இயக்கிவருகிறார்.
ஏற்கனவே சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா எனும் வெற்றி படத்தை கொடுத்த கௌதம் மேனன். தற்போது பத்து தல படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

simbu gautham vasudev menon
தற்போது சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கவுதம் மேனன் ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
