லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்ட சிம்பு.. பத்து தல செய்தியாளர் சந்திப்பில் வீசிய வலை

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சிம்பு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இப்போது சிம்புவின் புதிய தோற்றம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளது. மேலும் அடுத்ததாக ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

Also Read : கொள்கையை மாற்றிக் கொண்ட சிம்பு.. தயாரிப்பாளருக்கு வைத்த வேண்டுகோள்

லோகேஷ் கனகராஜ் பற்றி சிம்பு பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்பு இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சிம்பு பேசுகையில் பத்து தல படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். அதேபோல் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திலும் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

Also Read : ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

மேலும் லோகேஷின் படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளதாக சிம்பு புகழ்ந்து பேசி இருந்தார். அதாவது முன்னணி நடிகர்கள் லோகேஷின் படத்தில் நடித்திட வாய்ப்பு கிடைக்காதா என்று தவம் இருக்கிறார்கள். மேலும் ரஜினியே கூப்பிட்டு தனது படத்தை இயக்குமாறு லோகேஷ் இடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி ரஜினியின் கடைசி படத்தை லோகேஷ் தான் இயக்கம் இருக்கிறார். இப்போது சிம்பு எப்படியாவது ஸ்கெட்ச் போட்டு லோகேஷை தூக்கி விட வேண்டும் என அவரை புகழ்ந்து பேசி உள்ளார். வருங்காலத்தில் இவர்களது கூட்டணி இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இணைந்தால் தரமான சம்பவம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read : பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்