கொள்கையை மாற்றிக் கொண்ட சிம்பு.. தயாரிப்பாளருக்கு வைத்த வேண்டுகோள்

நடிகர் சிம்பு இப்போது தொடர் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பத்து தல படத்தின் ப்ரோமோஷனுக்காக தீயாய் வேலை செய்த வருகிறார். சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த ஆடியோ லாஞ்சில் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியிருந்தார்.

மேலும் பத்து தல படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்புவின் சம்பளம் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.

Also Read : ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

மேலும் இதிலிருந்து கொஞ்சம் கூட பின் வாங்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இப்போது தனது கொள்கையில் இருந்து சிம்பு விலகி உள்ளாராம். அதாவது என்னை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை எடுத்தால் சம்பளத்தில் கொஞ்சம் குறைத்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அதன்படி கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தில் 25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆகையால் சிம்புவை வைத்த பிரம்மாண்ட படம் எடுத்தால் மட்டுமே தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயார் என தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Also Read : பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

ஆகையால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இப்போது சிம்புவை நாடி வருகிறார்கள். ஏனென்றால் சின்ன பட்ஜெட்டில் சிம்பு இனி நடிப்பது கடினம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் பத்து தல ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ரிலீஸுக்காக சிம்பு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் தொடர்ந்து வெளியாக உள்ளது. இதன் மூலம் மீண்டும் பழைய ஃபார்முக்கு சிம்பு வந்துள்ளார். இனி அவருடைய ஆட்டம் தொடங்கிவிட்டது என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

Also Read : அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்