புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

கமலஹாசனால் வெளியில் தலை காட்ட முடியாத நிலைமை.. இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை

Simbu – Kamal Haasan: தமிழ் சினிமா டாட்டா காட்டி, மொத்தமாக கும்பிடு போட்டு அனுப்பி வைக்க நினைத்த சிம்பு, தன்னுடைய கடின உழைப்பின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்றது போல் அவருக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் தொடர் வெற்றிகள் அமைந்தன. இதனால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு சிம்புவுக்கு பட வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

பத்து தல படத்தின் ரிலீஸ்க்கு பிறகு சிம்பு உலக நாயகன் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த படத்திற்கான கதை விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

பட அறிவிப்பு வெளியான பிறகு இந்த படத்திற்கான அப்டேட்டுகள் எதுவுமே வெளிவரவில்லை. அதே சமயத்தில் சிம்புவும் பட வேலைகளுக்காக வெளிநாடு சென்று இருந்தார். தற்போது இந்த படத்தைப் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. கமலால், சிம்பு படாத பாடு பட்டு கொண்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

அதாவது சுமார் 100 கோடி பட்ஜெட்டில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்த படத்திற்காக சிம்பு, இடுப்பு வரை முடி வளர்த்து இருக்கிறாராம். பெண்கள் எப்படி நீளமாக முடி வளர்த்திருக்கிறார்களோ, அதே போன்று தான் இந்த ஹேர் ஸ்டைலில் தற்போது சிம்பு இருக்கிறாராம். இந்த கெட்டப்பின் சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் படக்குழு பார்த்து வருகிறது.

Also Read:கமலுக்கு அப்புறம் நீங்கதான்.. உங்களுக்காக தான் இந்த படத்தில் நடித்தேன் என மேடையில் உருகிய அபிராமி

இதனால்தான் சிம்பு வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு பொதுவெளிகளில் அவ்வளவாக தலை காட்டாமல் இருக்கிறார். இந்த கெட்டப் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சிம்பு சமீப காலமாக வீட்டை விட்டு கூட வெளியில் வருவது கிடையாது. இந்த படத்திற்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து இருக்கிறார் STR.

மேலும் இந்த ஹேர் ஸ்டைல் காரணத்தினால் தான் கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாக இருக்கும் KH 234 படத்தில் கூட நடிக்காமல் விலகி இருக்கிறார் சிம்பு. இதற்காக உலக நாயகன் கமலஹாசன் சிம்பு நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலில் வர இருக்கிறார். இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.

Also Read:கமல் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு?. வாரிசு நடிகரை லாக் செய்த உலகநாயகன்

- Advertisement -spot_img

Trending News