மீண்டும் வெற்றி இயக்குனருடன் கூட்டணி அமைத்த சிம்பு.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே.

சிம்புவின் நடிப்பில் தற்போது மாநாடு படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு புதிய படங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் உருவான வின்னைதாண்டி வருவாயா படம் தமிழ் சினிமாவில் சிறந்த காதல் படமாக இன்றளவிலும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்று வருகிறது. இதனைத் தொடர்ந்து உருவான அச்சம் என்பது மடமையடா படம் தோல்வியை சந்தித்தாலும், இவர்களுக்கான எதிர்பார்ப்பு திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது.

simbu gautham vasudev menon
simbu gautham vasudev menon

தற்போது சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் வசீகரமாக தோற்றமளிப்பது இன்னும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும், இவர்கள் மூவர் கூட்டணியில் உருவாகும் படம் காதல் படமா, ஆக்சன் படமா என ரசிகர்கள் மத்தியில் பேசத் தொடங்கியுள்ளனர்.

Next Story

- Advertisement -