பிரேம்ஜி மாதிரி நோஞ்சனாக மாறிய சிம்பு.. ஆள் அடையாளம் தெரியாமல் போன புகைப்படம்

Simbu weigh loss: நடிகர் சிம்புவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு சிம்பு உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இது சிம்புவா இல்லை பிரேம்ஜியா என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட சமயத்தில் சிம்பு ரொம்பவே உடல் எடை கூடி இருந்தார்.

அவருடைய அப்பா டி ராஜேந்தர் போல் இருப்பதாக எல்லோருமே கிண்டல் பண்ணினார்கள். தன்னுடைய அதிக உடல் எடையால் சிம்பு அதிக அவமானத்தை சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் முயற்சி செய்து 30 கிலோ எடை குறைத்து பெரிய சாதனையை செய்தார்.

அவர் அந்த உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்ட வீடியோக்களை அட் மேன் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பலருக்கும் பெரிய மோட்டிவேஷனாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் உடல் எடை குறைத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அவர் பட்ட கஷ்டத்திற்கு சினிமா தந்த பரிசு தான் மாநாடு படத்தின் வெற்றி. வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல படங்கள் டீசன்ட் வெற்றியை அவருக்கு கொடுத்தது. அதை தொடர்ந்து கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய நாற்பத்தி எட்டாவது படத்தில் இணைந்தார்.

மேலும் கமலஹாசனின் தக் லைப் படத்திலும் சிம்பு நடிக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் தன்னுடைய 48வது படத்திற்காக நீண்ட முடியை வளர்த்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் அவர் இந்த படத்திற்காக உடல் எடையை வேற குறைத்து இருக்கிறார் போல. அந்த புகைப்படம் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் சிம்புவின் இந்த உடல் எடை குறைப்பு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏதோ நோய் தாக்கியது போல் இருக்கிறார் என கமெண்ட் செய்வது என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஆள் அடையாளம் தெரியாமல் போன புகைப்படம்

Simbu drastic weight loss
Simbu drastic weight loss

Simbu drastic weight loss
Simbu drastic weight loss

Next Story

- Advertisement -