சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்ட 5 பிரபல நடிகைகள்.. இதில் ஒருவரை உருக உருக காதலித்த STR

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு காதல் கதை இருக்கும். ஒரு சில காதல் கதைகள் சொல்லிய காதல் சொல்லாமல் காதல் ஒருவர் மீது ஏற்படும் ஈர்ப்பு என்று பலவாறு கூறினாலும் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு காதல் வந்திருக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. அதில் சிலரின் காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிந்திருக்கும் பலருக்கு காதல் தோல்வி அடைந்திருக்கும் ஒருவருக்கு ஒரு காதல் தோல்வியை தாங்க முடியாது. ஆனால் இவருக்கு பல காதல்கள் ஆனால் எதுவும் வெற்றி அடையவில்லை என்பதே சோகமான ஒன்று.

நம்ம எஸ்டிஆர் சிலம்பரசனின் காதல் கதையையும் காதல் கண்மணி களையும் பார்ப்போம். ஆரம்ப காலத்தில் திரிஷாவுக்கும் சிம்புவுக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் வந்திருந்தன. அலை திரைப்படத்தின் மூலம் திரிஷா சிம்பு இணைந்து நடித்து இருந்தார்கள். இதன் மூலம் இருவருக்கும் காதல் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இருவருமே அமைதியாக இருந்துவிட்டனர். பின்பு நீண்ட நாட்கள் கழித்து விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இணைந்தனர். அப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என்று கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சிம்புவும் காதலிப்பதாகவும் இருவரும் சேர்ந்து வாழ முடிவு எடுத்து விட்டதாகவும் செய்திகள் வந்து வந்ததை அடுத்து ரஜினி அவசர அவசரமாக ஐஸ்வர்யாவுக்கு திருமணத்தை முடித்தார்.

simbu-nayanthara-cinemapettai
simbu-nayanthara-cinemapettai

இவர்களை எல்லாம் விட மிகவும் சுவாரசியமாக உள்ளது. நயன்தாராவும் சிம்புவும் காதலித்ததுதான் இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்தது. இருவரும் படு ரொமாண்டிக் காதலர்களாக வலம் வந்தனர். இருந்தபோதிலும் அவர்களிடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

அதையடுத்து ஹன்சிகா மோத்வானி சிம்பு காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் ஹன்சிகா என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் காதல் விவகாரத்தை மறுக்கவில்லை. இருப்பினும் சில மாதங்கள் கூட காதலிக்கவில்லை காதல் முடிவுக்கு வந்துவிட்டது.

இறுதியாக இப்போது ஆண்ட்ரியா விற்கும் சிம்பவிக்கும் காதல் என்ற வதந்தி பரவிவருகிறது. பின்னணி பாடகர், நடிகை என்று பன்முகம் கொண்ட ஆண்ட்ரியாவும் சிம்புவும் இங்கே என்ன சொன்னதும் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் .ஐந்து மணி நேரம் மட்டுமே இருவரும் சேர்ந்து நடித்த ஆகவும் ஆண்ட்ரியா தற்போது சிங்கிளாக தான் இருக்கிறார் என்றும் அவர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்