நடிப்பையே மறந்த ஸ்ருதிஹாசன்.. ரீஎன்ட்ரியாவது கைகொடுக்குமா?

தனுஷின் 3 படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த வாரிசாக சினிமாவில் நுழைந்தாலும் தனது நடிப்பின் மூலம் ஒரு சில படங்களிலேயே முத்திரை பதித்தார். ஆனால் அதன் பின்பு அவரை திரையில் காண முடியவில்லை.

தனது பாய் பிரண்டுடன் ஊர் சுற்றிக்கொண்டு சினிமாவையே மறந்து விட்டார் என பலர் கூறிவந்தனர். மேலும் அவ்வப்போது சமூகவலைத்தள பக்கத்தில் போடும் இவரது பதிவால் சர்ச்சைகளும் எழுந்து வந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிக்க வர உள்ளாராம்.

அதாவது கமலஹாசன் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக சினிமா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவற்றுக்கெல்லாம் தரமான கம்பேக் முலம் விக்ரம் படத்தை கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதுவரை இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஒரு ரீ என்ட்ரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையை சுருதிஹாசனும் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்துள்ளார். தற்போது ஒரு இயக்குனரை தேர்வு செய்துள்ளாராம்.

அதாவது யாமிருக்க பயமேன் படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு மிகுந்த முக்கியத்துவமுள்ள கதாபாத்திரமாம். இதனால் இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு ஸ்ருதிஹாசன் வேற லெவல் இருப்பார் என கூறப்படுகிறது.

கமலுக்கு எப்படி ரீ என்ட்ரியில் விக்ரம் படம் மாபெரும் வெற்றி கனியை கொடுத்ததோ அதே போல் ஸ்ருதிஹாசனுக்கு டிகே இயக்கும் படம் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

Next Story

- Advertisement -