ரஜினிக்காக ஓடிவந்த சிவராஜ்குமார், மோகன்லால்.. ஜஸ்ட் மிஸ் ஆன பாலய்யா

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் தற்போது சக்கை போடு போட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் பலரையும் கவர்ந்த ஒரே விஷயம் சிவராஜ்குமார், மோகன்லால் என்ட்ரி தான்.

அதைப்பற்றி தான் இப்போது சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக கிடக்கிறது. அதிலும் இந்த இரு நடிகர்கள் சிறிது நேரமே வந்தாலும் ஒட்டுமொத்தமாக ரசிகர்களையும் இம்ப்ரஸ் செய்து விட்டனர். அந்த அளவுக்கு இவர்களுக்கான வேற லெவல் மாஸை நெல்சன் கொடுத்திருக்கிறார்.

Also read: ஜெயிலர் படத்தின் இந்த கேரக்டர் விஜய்க்காக வைக்கப்பட்டதா.. திடீர் புரளியை கிளப்பிய நெட்டிசன்கள்

ஆனால் இதில் தெலுங்கு திரையுலகை மட்டும் ஏன் விட்டு வைத்து விட்டீர்கள் என்ற கேள்வியும் எழ தான் செய்கிறது. அதற்கு பதிலளித்துள்ள நெல்சன் தெலுங்கில் இருந்து பாலய்யாவையும் கதைக்குள் கொண்டு வர தான் நான் முயற்சித்தேன் என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

மேலும் கதையில் அவருக்கான இடத்தை கொடுக்க முடியவில்லை. அதனால் ஜெயிலரில் பாலய்யா நடிப்பது மிஸ் ஆகிவிட்டது. ஏனென்றால் அவருக்காக கதையை மாற்றக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன் என்று நெல்சன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: 100 கோடியை தொட முடியாமல் திணறிய ஜெய்லர் முதல் நாள் வசூல்.. ஏரியா வாரியாக அதிகாரப்பூர்வமாக வந்த ரிப்போர்ட்

இருந்தாலும் என்னுடைய அடுத்த படத்தில் அவரை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ஏனென்றால் மலையாளம், கன்னட திரை உலகின் டாப் நடிகர்கள் ரஜினிக்காக ஓடிவந்த நிலையில் தெலுங்கில் இருந்து பாலய்யாவையும் கூப்பிட்டு இருந்தால் நிச்சயம் வந்திருப்பார்.

ஆனால் அது முடியாமல் போய்விட்டது. மேலும் அவருக்காக கதையில் மாற்றம் செய்திருந்தால் ஏதாவது ஒரு குழப்பம் வந்திருக்கும். அந்த வகையில் நெல்சனின் கருத்தும் சரியானதாகவே இருக்கிறது. இருப்பினும் ரசிகர்கள் இந்த காம்போவை மிஸ் செய்து விட்டதாக கூறி வருகின்றனர்.

Also read: அனிருத் இருந்தா 100 கோடி கேட்கும் ரஜினி.. சின்ன பையனு ஏமாத்துறாங்க!

- Advertisement -spot_img

Trending News