வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஷாருக்கானுடன் 2வது முறையாக இணைந்த பிரபல காமெடியன்.. அட்லி கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. இவரது படங்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் வெற்றி பெற்று விடுகிறது. அந்த வரிசையில் இவரது முதல் படமான ராஜா ராணி படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மெளனராகம் படத்தின் காப்பி என பேசப்பட்டது. இருப்பினும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து விஜயை வைத்து அட்லி இயக்கிய தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களும் சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் அட்லி இணைந்துள்ளார். தற்போது தமிழ் சினிமா அல்லாமல் பாலிவுட் சினிமாவில் கால் இயக்குனராக கால் பதித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை அட்லி இயக்க உள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். இப்படம் மூலமாக நயன்தாரா முதன் முறையாக ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா மட்டுமல்லாமல் பல்வேறு தென்னிந்திய நடிகர்களையும் இப்படத்தில் அட்லி அறிமுகப்படுத்த உள்ளார். அதன் முதற்கட்டமாக தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளாராம். இதற்காக யோகி பாபுவிடம் அதிக நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

yogi babu
yogi babu

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், இப்படத்தில் யோகி பாபு நடிப்பது உறுதியானால் ஷாருக்கானுடன், யோகி பாபு இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு ஏற்கனவே ஷாரூக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அட்லி படத்தில் ஷாருக்கானுடனே பயணிக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News