மாஸ் ஹீரோ லுக்கில் மாறிய சமூக பாண்டியன்.. அப்பா கேப்டனை தூக்கி நிறுத்த போராடும் மகன்

தனக்குரிய ஸ்டைலில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடித்த எண்ணற்ற படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் தற்பொழுது இவர் மகனின் ட்ரெண்டிங் லுக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் கேப்டன் என்ற பெயரில் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்தவர். இவரின் மகனான சண்முக பாண்டியன் சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் தமிழ் சினிமாவில் தனக்குரிய அடையாளத்தை பெறவில்லை.

Also Read: வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

இவர் நடித்த படங்களில் சகாப்தம் மற்றும் மதுரவீரன் ஓரளவு விமர்சனத்தை பெற்று தந்தது. இருப்பினும் அதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென்று வெளிநாட்டிற்கு படிக்க சென்று விட்டார். தற்பொழுது மீண்டும் நடிக்கும் ஆர்வத்தில் களம் இறங்கி உள்ளார்.

அதைத்தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரை படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரேக்ளா படத்தின் இயக்குனரான அன்பரசன் இயக்கும் படத்திலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார். அந்த படம் காடு சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்பதால் தாய்லாந்து காடுகள் மற்றும் கேரளா காடுகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்து உள்ளனர்.

Also Read: விஜயகாந்த் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய 4 நடிகைகள்.. வயசு கோளாறு என ஆசையை மறைத்த கேப்டன்

மேலும் முழுக்க முழுக்க காடுகளில் படம் எடுக்கப்படுவதால் இந்த படத்தில் வாழும் இளைஞனாக சண்முக பாண்டியன் மாறி வருகிறார். அதற்கு உதாரணமாக ஆர் ஆர் ஆர் படத்தில் வரும் ஜூனியர் என் டி ஆர் இன் லுக்கில் தன் கெட்டப்பை மாற்றி வருகிறார். மேலும் தன் குடும்ப அமைப்பையும் அதற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டாராம்.

இவரின் இந்த ட்ரெண்டிங் லுக் போட்டோவை பார்த்து பல இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் வியந்துள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடிகனை நாம் இதுவரை பயன்படுத்தவில்லையே என நினைக்கும் அளவிற்கு இவர் உருமாறி இருக்கிறார். மேலும் கண்டிப்பாக இப்படத்தில் இவரின் முயற்சி தன் அப்பாவை போல நல்ல நடிகனாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read: வயசுலாம் ஒரு மேட்டரே இல்ல என திருமணம் செய்த 5 நடிகர்கள்.. 33 வயது பொண்ணுடன் ஆட்டம் போடும் பப்லு

Next Story

- Advertisement -