18 வருடத்திற்கு முன் ஷங்கர் படத்தில் துணை நடிகர், இன்று அவர் படத்துக்கு மியூசிக்.. மாஸ் காட்டும் பிரபலம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் துணை நடிகராக நடித்த ஒருவர் தற்போது அவருடைய அடுத்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சங்கர் தன்னுடைய படங்களில் எப்போதுமே இளைஞர்களை கவரும் வகையில் கொஞ்சம் கிளாமரும் சேர்த்துக் கொள்வார். இது சங்கர் பட வியாபாரங்களுக்கு பெரிய அளவில் உதவி வந்தது. இதனால் தற்போது வரை கவர்ச்சியை விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார் ஷங்கர்.

அதைப்போல் இளைஞர்களை கவர்வதற்காகவே முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் பாய்ஸ். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் தாக்கி பேசப்பட்டது.

ஆனால் இளைஞர்களிடம் எதிர்பார்த்த அளவு சென்றடைந்தது இந்த திரைப்படம். இந்த படத்தில் நாயகர்களாக சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் போன்றோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இசையமைப்பாளர் தமன். பாய்ஸ் படத்தில் டிரம்ஸ் இசைக் கலைஞராக நடித்திருப்பார். பின்னாளில் தமிழை விட தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.

thaman-boys-cinemapettai
thaman-boys-cinemapettai

தற்போது ஷங்கர் மற்றும் ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷனல் இசையமைப்பாளரும் இவர்தான் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஷங்கர் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் இன்று சங்கர் படத்திற்கே இசையமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Next Story

- Advertisement -