திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஒத்த வார்த்தையில் மொத்த சோழிய முடித்த பிரபல பத்திரிக்கை.. பெரிய அவமானத்தை சந்தித்த சங்கர்

பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குனர் என்றால் நம் ஞாபகத்துக்கு வருவது இயக்குனர் சங்கர். ஏனென்றால் இவர் இயக்கம் ஒவ்வொரு படங்களும் வித்தியாசமான கதைகளத்தையும் மிகவும் வியந்து பார்க்கக்கூடிய வகையிலும் தான் அமைந்திருக்கும். இதன் காரணமாகவே ஒவ்வொரு நடிகரும் இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று பல நடிகர்கள் தவம் இருக்கிறார்கள்.

அதேபோல் இவர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர் ஆரம்பத்தில் அதிகமான கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார். அதாவது இவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிறகு இவருக்கு படம் கொடுப்பதற்கு பல ஹீரோக்களும் மற்றும் தயாரிப்பாளர்களும் யோசித்து இருக்கிறார்கள்.

Also read: பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2.. கண்டம் விட்டு கண்டம் போகும் கமல், ஷங்கர்

அதே மாதிரி அந்த நேரத்தில் பல பெரிய ஹீரோக்கள் இவரது முதல் படத்தை நிராகரித்திருக்கிறார்கள். அப்பொழுது தான் நடிகர் அர்ஜுன் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. பின்பு இதைத் தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பெற்றார்.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இதில் நடித்த அனைவருமே புது முகங்கள் தான். இக்கதை ஆறு இளைஞர்களின் பருவ வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த படத்திற்கு பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒரு விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

Also read: தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைத்த சங்கர்.. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்

அந்த ஒத்த வார்த்தை இவருடைய சினிமா கேரியரை க்ளோஸ் பண்ணும் அளவிற்கு ஆகிவிட்டதாம். அதாவது பொதுவாகவே எந்த ஒரு படங்களும் ரிலீஸ் ஆகி வந்தால் அந்தப் படத்திற்கான விமர்சனங்களை பத்திரிக்கை மூலமாக வெளியிடுவார்கள். அப்பொழுது இந்தப் படத்திற்காக சொன்னது மிகவும் இவரை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு போய் இருக்கிறது.

பிரபல பத்திரிக்கை இந்த படத்திற்கு ஒற்றை வார்த்தையில் ” சீ ” என்று விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் இயக்குனர் சங்கர் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மனதளவில் முழு முயற்சியுடன் தொடர்ந்து படங்களை இயக்கிய வந்ததால் இன்று அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்.

Also read: எனக்கு போட்டி நான்தான்டா.. பொங்கலுக்கு இந்தியன்-2 உடன் மோதும் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்

- Advertisement -

Trending News