மட்டமாக நடந்துகொள்ளும் ஷங்கர்.. வடிவேலுவை வைத்து விமர்சித்த சினிமாவாசிகள்

தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை படத்தை மட்டும் பார்க்காமல் படத்தில் பணியாற்றிய நடிகர் மட்டுமே இயக்குனர்களின் குணாதிசயங்களையும் கவனிக்க தவற மாட்டார்கள். அப்படி கவனிக்க போய்தான் ஷங்கர் தற்போது மாட்டியுள்ளார்.

அதாவது சமீபகாலமாக இணையதளத்தில் பேசும் பொருளாக அமைந்துள்ளதுதான் ஷங்கரின் இந்தியன் 2 பட விவகாரம். இந்தியன் படத்தின் 2 பாகத்தில் மும்முரமாக பணியாற்றி வந்த ஷங்கர் அதன் பிறகு ஒரு சில காரணங்களால் படத்தை எடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்தன. தற்போது வரை இந்த மோதலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் உள்ளது.

indian2-cinemapettai
indian2-cinemapettai

ஆனால் ஒரு காலத்தில் ஷங்கர் தயாரிப்பாளராக இருந்தபோது இம்சை அரசன் 24ம் புலிகேசி என்னும் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதன் பிறகு ஷங்கர், வடிவேல் மற்றும் சிம்புதேவன் ஆகிய மூவரும் இணைந்து அதிகாரபூர்வமாக அறிவித்து படப்பிடிப்பு தொடங்கினர்.

ஆனால் இடையில் ஷங்கருக்கும் வடிவேலுவும் இடையே ஒரு சில மோதல்கள் ஏற்பட இயக்குனர் சிம்புதேவன் இந்த சண்டையில் கலந்து கொள்ள வேறு வழியின்றி வடிவேல் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அப்போது சங்கர் வடிவேலு படத்தை முடிக்காமல் திடீரென விலகியதால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும். அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக செட் போட்டதால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நஷ்டஈடு வடிவேல் கொடுக்க வேண்டும் என கூறினார்.

அதன் பிறகு வடிவேலு தொடர்ந்து படங்கள் நடிக்க முடியாத அளவிற்கு ஒரு சில தடைகளை கொடுத்து சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலக வைத்தார்.

இதனை பார்த்த இணையத்தள வாசிகள் மற்றும் சினிமா வாசிகள் சங்கர் தயாரிப்பாளராக இருந்த 24ஆம் புலிகேசி படத்திற்கு மட்டும் நஷ்டம் ஏற்பட்டதாக வேகமாக பணத்தை கேட்ட ஷங்கர் அதேபோல் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் அந்நியன் ரீமேக் எடுப்பது நாயமா எனவும், ஷங்கருக்கு “வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா” எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது 24ஆம் புலிகேசி படத்திற்கு சில கோடி மட்டும் செலவு செய்துவிட்டு நஷ்டஈடு கேட்ட ஷங்கர். இந்தியன் 2 படத்திற்கு தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். இதற்காக சங்கரிடம் எவ்வளவு வேணாலும் நஷ்ட ஈடு கேட்கலாம் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்