திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினி.. தேடி வந்த அரவணைத்த அஜித்தின் புகைப்படம்

Ajith-Shalini: சினிமா துறையில் இருப்பவர்கள் கல்யாணத்திற்கு பிறகு எப்படி மனம்ஒத்தும் தம்பதிகளாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அஜித் மற்றும் ஷாலினி வாழ்ந்து வருகிறார்கள். அதுவும் ஷாலினி நடித்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து அவருடைய மார்க்கெட் அதிகரித்து வந்தது. அந்த நேரத்தில் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை முழுமையாக பார்த்து இல்லத்தரசியாக இருக்க வேண்டும் என்பதால் நடிப்புக்கு ஒரேடியாக முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்திற்காகவே வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட ஷாலினி இரண்டு குழந்தைகளுக்கு உன்னதமான தாயாகவும், அஜித்தை புரிந்து கொண்ட சிறந்த மனைவியாகவும் இருக்கிறார்.

ஷூட்டிங்கை விட்டு சென்னை திரும்பிய அஜித்

ஆனால் லட்சியத்தை எப்போதுமே விட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமணத்திற்கு பிறகும் ஷாலினி அவருக்கு பிடித்தமான பேட்மிட்டன் விளையாட்டு விளையாண்டு வருகிறார். அதே மாதிரி அஜித்தும் என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தாலும் குடும்பத்திற்கு செலவழிக்கும் நேரத்தை சரியாக ஒதுக்கிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அஜித் எங்கு இருந்தாலும் ஓடோடி வந்து விடுவார். அப்படி ஒருவேளை அஜித் வரவில்லை என்றால் குடும்பத்தை அவர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து அந்த நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு போய் விடுவார். அப்படித்தான் சமீபத்தில் அஜித்தின் மகன் பிறந்தநாளை துபாயில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வந்தார்கள்.

மனைவி கையைப்பிடித்து ஆறுதல் சொல்லிய அஜித்

shalini ajith
shalini ajith

இதையெல்லாம் முடித்துவிட்டு விடாமுயற்சி படப்பிடிப்புக்கு சமீபத்தில் தான் சென்னையில் இருந்து அஜர்பைஜான் சென்றார். அங்கே ஷூட்டிங் மிக மும்மரமாக போய்க்கொண்டிருந்தது. காரணம் தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மொத்த டீமும் படு பிஸியாக இருந்தார்கள். இந்த சூழ்நிலையை சென்னையிலிருந்து அஜித்தின் மனைவி ஷாலினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டது.

அந்த வகையில் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போன ஷாலினி உடனடியாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை பண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அந்த வகையில் அவருக்கு சர்ஜரி செய்ய முடிவு ஏற்பட்ட நிலையில் இதை கேள்விப்பட்டதும் அஜித் ஜெட் வேகத்தில் பறந்து சென்னைக்கு திரும்பி விட்டார். பிறகு மருத்துவமனையில் இருக்கும் ஷாலினியை பார்த்து கையைப் பிடித்து அரவணைத்து மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கிறார்.

அந்த வகையில் ஷாலினி கையை அஜித் பிடித்துக் கொண்டு நான் இருக்கிறேன் என்று சொல்வதற்கு ஏற்ப இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஷாலினி முழுமையாக குணமாகி வீட்டிற்கு திரும்பிய நிலையில் தான் அஜித் மறுபடியும் அஜர்பைஜானுக்கு போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பற்றி வெளிவந்த சமீபத்திய செய்திகள்

Next Story

- Advertisement -