3 நாட்களில் சைத்தான் மொத்த வசூல்.. தியேட்டரையே அலறவிடம் மாதவன்

Shaitaan 3 Day Collection : சமீபத்தில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான சைத்தான் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வர செய்யும் அளவுக்கு திரில்லர் நிறைந்த இந்தப் படம் வெளியான மூன்று நாட்களில் பல கோடிகளை அள்ளி இருக்கிறது.

தமிழில் மிகவும் பிரபலமான மாதவன் மற்றும் ஜோதிகா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்திருந்த படம் தான் சைத்தான். மேலும் ஏற்கனவே பாலிவுட்டில் பல ஹிட் படங்கள் கொடுத்த ஜோதிகா ரீ என்ட்ரியிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஒரு இளம் பெண்ணை தான் சொல்லும் செயலை செய்யும்படி மந்திரத்தால் ஆட்டிப்படைக்கும் வில்லனாக மாதவன் சைத்தான் படத்தை மிரட்டி இருந்தார்.

இதுவரை இவரிடம் இப்படி ஒரு கொடூரமான நடிப்பை யாரும் கண்டு இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மாதவன் மிரள விட்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் நாளே 15.21 கோடி வசூல் செய்திருந்தது.

Also Read : எதிர்பார்ப்பை மீறி பல கோடிகளை அள்ளிய சைத்தான்.. முதல் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

அன்றே படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில் டிக்கெட் புக்கிங் பட்டையை கிளப்பியது. அதோடு அடுத்தடுத்து தொடர் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை 19.8 கோடியும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 20.75 கோடியும் வசூல் செய்திருந்தது.

மேலும் மொத்தமாக மூன்று நாட்கள் முடிவில் கிட்டத்தட்ட 55 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆகையால் இன்னும் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே சைத்தான் படம் 100 கோடி வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் தொடர்ந்து சைத்தான் பட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு வருவதால் திரையரங்கு ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது.

Also Read : சூனியம் வச்சே 100 கோடி கிளப்பில் இணைய உள்ள மாதவனின் சைத்தான்.. முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா?

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்