சூனியம் வச்சே 100 கோடி கிளப்பில் இணைய உள்ள மாதவனின் சைத்தான்.. முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா?

Shaitaan : பாலிவுட்டில் மாதவன் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்திருக்கும் சைத்தான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அஜய் தேவ்கன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் மாஸ் திரில்லர் படமாக சைத்தான் உருவாகியுள்ளது.

இதுவரை மாதவனை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு சைக்கோ வில்லனாக மிரட்டி விட்டுள்ளார். சூனியம் வைத்து தான் சொல்வதை ஒரு இளம் பெண்ணை செய்ய வைத்து உள்ளார். மேலும் அஜய் தேவகனும் ஒரு தந்தையாக மகளின் மனநோயை பார்த்து பரிதவிக்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.

இவர்களுக்கு தானும் சளைத்தவள் இல்லை என ஜோதிகா சப்போட்டிங் கேரக்டரில் பக்காவாக நடித்துள்ளார். இவர்களைத் தாண்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கதாபாத்திரம் ஜான்வியாக நடித்த ஜான்கி போடிவாலா தான். தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் கைதட்டை பெற்றிருக்கிறார்.

Also Read : Shaitaan Movie Review- ஜோதிகாவை ஆட்டிப்படைக்கும் சைக்கோ மாதவன்.. அஜய் தேவ்கனின் சைத்தான் முழு விமர்சனம்

இந்த படத்தின் டிரைலரே வரவேற்கப்பட்ட நிலையில் இப்போது படமும் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அதோடு முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடியில் இருந்து 13 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு கிடைக்கும் விமர்சனத்தினால் இப்போதே டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடந்து வருகிறது.

அதுவும் ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று உள்ளது. ஆகையால் மிக விரைவிலேயே சைத்தான் படம் 100 கோடி வசூலில் இணைய உள்ளது. எனவே ஜோதிகா மற்றும் மாதவனுக்கு சிறந்த கம்பேக் படமாக சைத்தான் படம் அமைந்திருக்கிறது.

Also Read : Shaitaan X Review- ஜோதிகாவை கொலை நடுங்க வைத்த சைத்தான்.. லவ்வர் பாய் மேடியா இது? மிரளவிடும் எக்ஸ் விமர்சனம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை