விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்

கோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் இணைந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஜவான். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் காத்திருப்பதற்கு கிடைத்த பலனாக தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால் அவருடைய அடுத்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நடிகர் ஷாருக்கான் பயங்கர உற்சாகமாக காணப்படுகிறார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியையும் அவர் நடத்தினார். அதில் ஷாருக்கான் பற்றியும், ஜவான் திரைப்படத்தைப் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரொம்பவும் வெளிப்படையாக பதில் அளித்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.

Also Read:ஆடு புலி ஆட்டத்திற்கு அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. என்னம்மா யோசிக்கிறாரு மனுஷன்

அந்த கேள்வி பதிலில் ஒரு ரசிகர் படத்தின் ரிலீஸுக்கு ஏன் இவ்வளவு தாமதம் ஆகிவிட்டது என்று கேட்டதற்கு, படத்தை பார்ப்பவர்களுக்கு எல்லாவற்றையும் தரமாக கொடுப்பது என்பது ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதற்காகத்தான் இவ்வளவு காலகட்டம் எடுத்துக்கொண்டது என்றும், மேலும் அட்லியையும் அவருடைய குழுவையும் தனக்கு ரொம்பவும் பிடித்துப் போய் விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

நயன்தாராவை பற்றியும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றியும் பேசிய ஷாருக்கான், மிகவும் அழகானவர் மற்றும் பேசுவதற்கு இனிமையானவர் என்று சொல்லி இருக்கிறார். மேலும் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதி தான் என்று சொல்லி இருக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:புது அவதாரம் எடுத்திருக்கும் விஜய்யின் வாரிசு.. அப்ப எஸ்ஏசி சொன்னதெல்லாம் உண்மைதான் போல

மேலும் ஒரு ரசிகர் அட்லியுடன் படம் பண்ணியிருக்கிறீர்கள் தமிழ் கற்றுக் கொண்டீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஷாருக்கான் தமிழில் இரண்டு, மூன்று வரிகள் பாடலை நான் பாடியிருக்கிறேன். ஆனால் அது சரியாக வந்ததா, தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று புதிய அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அட்லியின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த அனைத்து படத்திலும் அட்லி, விஜய்யை ஒரு பாடல் பாட வைத்திருப்பார். அதே பாணியை தான் தற்போது ஷாருக்கானிடமும் உபயோகித்திருக்கிறார் இயக்குனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் ஷாருக்கான் தமிழில் பாடிய அந்த பாடலை கேட்பதற்கு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Also Read:எவ்வளவு பட்டும் திருந்தாத விஜய்.. பாலகிருஷ்ணாவை தொடர்ந்து மாட்டிய தளபதி – 68

Next Story

- Advertisement -