நடிப்பை தாண்டி ஷாருக்கான் கல்லா கட்டும் 5 தொழில்கள்.. கோடிக்கணக்கில் கொட்டும் பணமழை

Actor Shah Rukh Khan: இப்போதெல்லாம் நடிகர்கள் நடிப்பதையும் தாண்டி சொந்த தொழில் மூலம் கோடி கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர். அதில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் ஏகப்பட்ட பிசினஸ் செய்து வருகிறார். அவற்றில் குறிப்பிட்ட 5 தொழில்கள் மட்டும் அவருக்கு பெரும் லாபத்தை கொடுக்கிறது.

அந்த வகையில் இவர் அம்பானி உள்ளிட்ட பிரபலங்களின் வீட்டு விழாவில் டான்ஸ் ஆடுவதற்கு 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அதற்கு அடுத்ததாக குழந்தைகள் விளையாடும் தீம் பார்க் ஒன்றையும் நடத்தி வருகிறார். இது பெரிய அளவில் வருமானத்தை கொடுக்கவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து இந்த பிசினஸை செய்து வருகிறார்.

Also read: ஷாருக்கான் கூப்பிட்டா வர முடியாது, அம்பானி கூப்பிட்டா ஓகே.. துள்ளி குதித்து மும்பைக்கு பறந்த நயன்-விக்கி ஜோடி

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலும் இவருக்கு கோடிக்கணக்கில் லாபத்தை கொடுத்து வருகிறது. நியாயமாகவும் தரமாகவும் இந்த தொழிலை அவர் செய்து வருவதால் 30 லிருந்து 40 கோடி வரை இதன் மூலம் மாத வருமானம் கிடைக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணியின் ஓனராகவும் இவர் இருக்கிறார். இந்த குழுவின் டி ஷர்ட்டில் ஏதாவது ஒரு கம்பெனியின் விளம்பரம் இடம் பெற வேண்டும் என்றால் 15 கோடி வரை கொடுக்க வேண்டுமாம். கிட்டத்தட்ட ஏழு, எட்டு கம்பெனிகளின் விளம்பரம் அதில் இடம்பெறும்.

Also read: இந்த வருடத்தில் பாப்புலரான 10 ஹீரோக்கள்.. ஒரு படம் கூட வெளிவராமல் ஷாருக்கானை ஓரம் தள்ளிய அஜித்

இதன் மூலம் அவர் எவ்வளவு சம்பாதிப்பார் என்பதை கணக்கிட்டு பார்த்தாலே தலை சுற்றுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக தயாரிப்பாளராகவும் அவர் கல்லா கட்டி வருகிறார். அந்த வகையில் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் இவர் சமீபத்தில் ஜவான் படத்தை தயாரித்திருந்தார்.

அட்லி இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த அப்படம் இப்போது வரை 980 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஷாருக்கானுக்கு எதிர்ப்பார்த்ததற்கும் மேலாகவே லாபத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் நடிப்பையும் தாண்டி அவருக்கு இந்த ஐந்து தொழில்களும் கோடி கணக்கில் பணத்தை கொட்டி கொடுக்கிறது.

Also read: விஜய் நிராகரித்ததால் ஷாருக்கான் எடுத்த அதிரடி முடிவு.. தளபதி போல் இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம்

- Advertisement -