பயத்தில் அட்லீக்கு கண்டிஷன் போட்ட ஷாருக்கான்.. யாருடனும் போட்டி போட விரும்பல

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஜவான் திரைப்படம். இந்தப் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்துடன் தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இப்படத்தின் மூலம் தான் பாலிவுட்டில் காலடியை எடுத்து வைக்கிறார்.

இப்படம் கடந்த நான்கு வருடங்களாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகளால் தாமதமாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இப்படத்திற்கான டீசர் வெளியான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. அந்த டீசரில் ஷாருக்கான் பார்க்கவே பயங்கரமாக வெறித்தனமாக இருக்கிறார். அத்துடன் இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

Also read: நாலு வருட தவம், அட்லீயை உருட்டும் கெட்ட நேரம்.. தள்ளி போகும் ரிலீஸ் தேதி

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. அத்துடன் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. மேலும் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன், விஜய், சஞ்சய் தத், அல்லு அர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளார்கள். இதனை அடுத்து ஷாருக்கானுக்கும் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்புடன் நம்பிக்கையே வைத்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த படம் வெளியிடும் நேரத்தில் மற்ற படங்களும் வந்து போட்டி போடக்கூடாது என்று ஒரு பயத்தில் இருக்கிறார்.

Also read: பொறுமையும் ஒரு அளவுக்கு தான்.. அட்லீக்கு கடைசி வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்

ஆனால் அவர் பயந்த மாதிரியே கிட்டத்தட்ட இப்படத்துடன் மோதுவதற்கு இரண்டு படங்கள் தயாராகி இருக்கிறது. அதாவது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், சுருதிஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் சாலார் படம். ஏற்கனவே இந்த இயக்குனர் எடுத்த படமான கே ஜி எஃப் 1,2 எந்த மாதிரியான தாக்கத்தை ரசிகர்களிடமிருந்து ஏற்படுத்தியது என்று அனைவரும் தெரிந்தது.

அதனால் ஜவான் படம் வரும் போது சாலார் படம் வெளிவந்தால் எந்த அளவுக்கு வெற்றியடையும் என்ற பயத்தினால் கூடிய சீக்கிரத்தில் படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று அட்லீக்கு கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதற்கிடையில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தி திரைப்படம் அனிமல். இப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருப்பதால் இந்த படங்களுக்கு முன்னாடியே தன்னுடைய படத்தை வெளியிட வேண்டும். அத்துடன் எந்த வித போட்டியும் போட எனக்கு விருப்பமில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

Also read: அட்லீயால் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூப்பர் ஸ்டார்.. பதட்ட நிலையில் ஷாருக்கான்

Next Story

- Advertisement -