சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரகசியமாக நிச்சயம் செய்து கொண்ட செம்பருத்தி சீரியல் ஷபானா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான இல்லத்தரசிகள் ரசிகர்கைகளாக உள்ளனர். இந்த சீரியலில் நடிகை ஷபானா பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யன் என்பவருக்கும் நிச்சயம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

நடிகர் ஆர்யனிடம் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகை ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா? என கேட்டுள்ளார். இதற்கு ஆர்யன் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவை டேக் செய்து ‘இவங்களுக்கு என்ன சொல்லட்டும்’ எனக் கேட்க, ஷபானாவும் ‘மைன்’ (அவர் என்னுடையவர்) என பதிவிட்டிருந்தார்.

ariyan-shobana
ariyan-shobana

இதிலிருந்து ஆர்யன்- ஷபானா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கியது. இந்நிலையில் ஆர்யன் இருவருடைய கைகளிலும் ஒரே மாதிரி மோதிரம் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “அவளுடைய ஆன்மாவில் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஒரு நாள் எங்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி குறையும். வெளிப்புற அழகும் குறைந்து விடும். ஆனால் ஆன்மாவுக்கு வயதில்லை. அது வாழ்ந்து கொண்டிருக்கும். அதுதான் அன்பு வாழும் இடம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

ring-aryan-shobana
ring-aryan-shobana

இதனால் ஆர்யன்- ஷபானாவுக்கு நிச்சயமாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்யன் மற்றும் ஷபானாவுக்கு நெருங்கிய திரைப்பிரபலங்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Trending News