ஒரே வாரத்தில் விவாகரத்துக்கு வந்த ஷாபானா ஆரியன் திருமணம்.? அட கொடுமையே!

கடந்த வாரங்களில் மட்டும் அதிகப்படியான சின்னத்திரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் முக்கியமான ஜோடிகளாக பார்க்கப்பட்டது செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த ஷாபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியன் ஆகியோரது திருமணம் தான்.

இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக கூறிய நிலையில், அடுத்தது ஒரு மூன்று வருடம் கழித்து தான் திருமணம் செய்து கொள்வார்கள் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் யாருக்கும் சொல்லாமல் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

ஆரம்பத்தில் இருந்தே ஷபானாவை திருமணம் செய்துகொள்ள ஆரியன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற பேச்சு இருந்தது. அது தற்போது வரை தொடர்கிறது. கிட்டத்தட்ட திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் இன்னமும் ஆரியன் வீட்டுக்கு ஷாபானாசெல்ல வில்லை என்றே கூறுகின்றனர்.

ஷாபானாவுக்கு தனிப்பட்டமுறையில் ஆரியன் வீட்டிலிருந்து போன் செய்து, அவனுக்கு வேற பெண் பார்த்து விட்டோம், இனி மேல் நீ அவனை விட்டு சென்று விட வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறுகின்றனர். தற்போது இந்த செய்திதான் சினிமா வட்டாரங்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

நான்கு நாட்கள் பாண்டிச்சேரிக்கு ஹனிமூன் பிளான் செய்து சென்ற இருவரும் அடுத்த நாளே சென்னை திரும்பி விட்டதாகவும், அங்கே சென்ற இருவருக்கும் குடும்பத்தினரின் பிரஷர் தாங்கமுடியாமல் வாக்குவாதம் முற்றி, கருத்து வேறுபாடு வந்ததாக தெரிகிறது. பெற்றோர்கள் சம்மதிக்காத இந்த திருமணத்திற்கு முழுக்க முழுக்க உதவியாக இருந்தது மற்றொரு சின்னத்தை நடிகையான ரேஷ்மா தான் என்கிறார்கள்.

அவரையும் ஆரியன் குடும்பத்தினர் விட்டுவைக்கவில்லை. அவர்களது பங்குக்கு ரேஷ்மாவையும் வெளுத்து வாங்கி விட்டார்களாம். எவ்வளவு நாட்கள் இந்த விஷயத்தை மூடி மறைக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை, வெகு சீக்கிரமே இந்த விஷயம் வெளிவரும் எனவும் கூறுகின்றனர்.

கண்டிப்பாக இருவரும் விரைவில் விவாகரத்து வாங்கிக் கொள்ள ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இந்த மாதிரி செய்திகள் வரும்போது அவர்களாகவே முன்வந்து இதற்கான விளக்கத்தை கொடுத்து விட்டால் நல்லது என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்