நடிகைகள் கைநழுவ விட்ட பக்காவான 7 படங்கள்.. குந்தவையாக நடிக்க இருந்த கீர்த்தி நடிகை

தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களில் ஹீரோயின் ஆக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் அது சரியாக பயன்படுத்தாமல் அந்த வாய்ப்பை கைநழுவ விட்ட நடிகைகள் சில பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் அந்த படம் வெளியாகி வந்து சூப்பர் ஹிட் படங்களாக ஆன போது தவற விட்டதை நினைத்து புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் யார் மற்றும் அது எந்தெந்த படங்கள் என்று பார்க்கலாம்.

சிவாஜி: எஸ்.சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு சிவாஜி தி பாஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், சுமன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ஸ்ரேயா உடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாகவும், பார்த்து ரசிக்கக்கூடியதாகவும் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். ஆனால் இந்த படத்தில் முதலில் இவருக்கு பதிலாக சினேகா தான் நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் இயக்குனர் சங்கர், நடிகை ஸ்ரேயாவை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

Also read: விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா.. கணவருடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

பொன்னியின் செல்வன்: மணிரத்தினம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு பொன்னின் செல்வன் முதல் பாகம் வெளிவந்தது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயின், நந்தினி கேரக்டருக்கு முதலில் அனுஷ்கா அவர்கள் தான் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனால் இப்படத்தை ஒரு பான் இந்தியா திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டதால் இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் இருந்தால் நல்லா இருக்கும் என்று முடிவு எடுத்து இருக்கிறார். அதனால் அனுஷ்காவிடமிருந்து இந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது.

பில்லா: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், பிரபு, ரகுமான், நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாரா ரோல் மிகவும் கச்சிதமாக இவர் தான் இந்த கேரக்டருக்கு செட் ஆகும் என்று சொல்லும் அளவிற்கு நடித்துக் காட்டியிருப்பார். ஆனால் முதலில் இவருக்கு பதிலாக இந்த கேரக்டரில் அசின் தான் நடிக்க இருந்திருக்கிறது. பின்பு அசின் அந்த நேரத்தில் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

Also read2 வருடம் கழித்து தரமான என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. மீண்டும் தேவசேனா போல் மிரட்ட வராங்க!

அலைபாயுதே: மணிரத்தினம் இயக்கத்தில் 2000 ஆண்டு அலைபாயுதே திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், ஷாலினி, ஜெயசுதா, ஸ்வர்ணமால்யா மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஷாலினிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகை வசுந்தரா தாஸ். பிறகு இவரை வைத்து கொஞ்சம் ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் செய்த பிறகு மணிரத்தினம் எதிர்பார்த்த அளவிற்கு சில விஷயங்கள் இல்லாததால் இவருக்கு பதிலாக ஷாலினியை நடிக்க வைத்தார்.

சுப்ரமணியபுரம்: சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சுவாதி தமிழில் அறிமுகமான முதல் படமாகும். ஆனால் இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் நடிப்பதற்கு காதல் சந்தியாவை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் இவர் அப்பொழுது மலையாள படத்தில் கமிட் ஆகி இருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

Also read: சினிமாவே வேண்டாம் என தெறித்து ஓடிய 6 ஹீரோயின்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு தங்கையான பின் சோலி முடிந்த கேரியர்

படையப்பா:  கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் சௌந்தர்யா கேரக்டர் மிகவும் பொறுமையாகவும் பார்க்கவே அப்பாவித்தனமான முகபாவனையும் வேண்டும் என்பதால் முதலில் இவருடைய கேரக்டருக்கு தேவயானி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்பொழுது அவர் 5,6 படங்களில் பிஸியாக கமிட் ஆகி நடித்துக் கொண்டிருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

பொன்னியின் செல்வன்: மணிரத்தினம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு பொன்னின் செல்வன் முதல் பாகம் வெளிவந்தது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் நடித்தார்கள். இதில் திரிஷாவின் குந்தவை கேரக்டருக்கு முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக த்ரிஷா நடித்தார். இதில் த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.

Also read: 39 வயதிலும் இளமை மாறாத திரிஷா.. பிளடி ஸ்வீட் தளபதியுடன் வெளிவந்த வைரல் புகைப்படம்

Next Story

- Advertisement -