விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் மாப்பிள்ளை, ராஜா ராணி, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களிலும் மகராசி, கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகை வைஷாலி தனிகா.
இவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணனின் காதலியான ஐஸ்வர்யாவாக முதலில் நடித்திருப்பார். அதன்பிறகு இவருக்கு பதில் தீபிகா, அவருக்கு பதில் தற்போது காயத்ரி என மாற்றப்பட்டனர். இருப்பினும் ஐஸ்வர்யாவாக முதலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வைஷாலி தான்.
தற்போது தனது பிறந்த நாளை கொண்டாடிய வைஷாலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் செய்தியை அறிவித்துள்ளார். அதில், இதுதான் தன்னுடைய கடைசி பேச்சுலர் பிறந்தநாள் என்றும், அடுத்து பிறந்தநாளில் திருமதி சத்யதேவ் ஆக மாறி விடுவேன் என்றும் விரைவில் திருமணத் தேதியை அறிவிப்பதாகவும் வைஷாலி தெரிவித்துள்ளார்.
வருங்கால கணவருடன் இணைந்து எடுத்து இருக்கும் புகைப்படத்தையும் வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிறந்தநாள் அன்று தனது திருமணத்தைப் பற்றிய தகவலை அறிவித்தது ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காதது.
இருப்பினும் நடிகை வைஷாலி தனிகாவிற்கு சோசியல் மீடியாக்களில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து பொழிந்து வருகின்றனர். அத்துடன் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வேண்டும் என்று வைஷாலியை அவருடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனென்றால் சில சீரியல் நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து விடுவதால், அவ்வாறு வைஷாலியும் செய்து விடுவாரோ என்று ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.