திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

செந்தில் மீனா சந்தோஷத்திற்கு தடையாக இருக்கும் பாண்டியன்.. அல்ப விஷயத்துக்கு கணக்கு பார்க்கும் மாமனார்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் மீனா, செந்திலை திருமணம் செய்து பாண்டியன் வீட்டிற்கு வந்ததால் தற்போது நாடகம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது மீனா வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டு பாண்டியன் வீட்டுக்கு வந்தாலும் அங்கு இருப்பவர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.

முக்கியமாக மீனாவின் மாமியார் கோமதி மனதில் நல்ல இடத்தை பிடித்து, ஒரு பொறுப்பான மருமகள் என்று சொல்லும் அளவிற்கு கதிரை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து பாண்டியனை எதிர்த்து பேச வைத்து விட்டார். அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாக அந்த வீட்டில் உள்ள மருமகள் என்கிற அந்தஸ்தையும் பெற்று வருகிறார்.

அடுத்தபடியாக செந்தில் மீனாவிற்கு சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணுவதற்கு எல்லா விஷயமும் நடந்தது. ஆனால் பாண்டியன், செந்திலிடம் உன்னுடைய மூத்த அண்ணனுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கு. அதுக்குள்ளே நீ இப்படி எல்லாம் பண்ணினா அவனுடன் மனசு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாரு என்று கூறிவிட்டார்.

Also read: கொழுந்தனை பார்த்து மன்னிப்பு கேட்கும் மீனா.. கதிரை கடையிலிருந்து துரத்தி அடித்த பாண்டியன்

இப்படி பாண்டியன் சொன்னதால் செந்தில் மீனாவிடம் இப்போதைக்கு எதுவும் வேண்டாம். அண்ணனுக்கு திருமணம் நல்லபடியாக முடியட்டும் என்று சொல்லிவிட்டார். அதற்கு ஏற்ற மாதிரி மீனாவும் செந்திலுக்கு சப்போர்ட்டாக போய்விட்டார். இதனை அடுத்து செந்தில் மீனா தனியா வெளியே போகலாம் என்று முடிவு எடுத்த நிலையில் தியேட்டருக்கு போயிட்டு வருகிறோம் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் கேட்கிறார்.

உடனே பாண்டியன் எழுந்து கோபமாக போய்விடுகிறார். அதற்கு கோமதி ஏதாவது பிரச்சனையாக வெடிக்கப் போகிறது என்று பயத்தில் இருக்கும் பொழுது பாண்டியன் இவர்களுக்கு 60 ரூபாய்காண டிக்கெட் எடுத்துட்டு வந்து கொடுத்து முன் சீட்டிலிருந்து பார்த்தால் தான் யாரும் மறைக்க மாட்டாங்க என்று கஞ்சத்தனமாக பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் இடைவெளியில் அங்க போய் வாங்கி சாப்பிட்டால் தேவையில்லாமல் பணம் தான் வேஸ்ட் ஆகும்.

அதனால் வீட்டில் இருந்தே முறுக்கு பலகாரங்கள் எல்லாத்தையும் கொண்டு போங்க என்று அல்ப விஷயத்துக்கு எல்லாம் கணக்கு பார்த்து மீனாவை டென்ஷன் படுத்தி வருகிறார். இதற்கு அடுத்து இந்த விஷயத்துக்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக மீனா அவருடைய சம்பளத்தை வீட்டில் கொடுக்கப் போகிறார். அத்துடன் இனி பாண்டியன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாக மீனா ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கப் போகிறார்.

Also read: தொட்டதுக்கெல்லாம் கதிரை வெளுத்து வாங்கும் பாண்டியன்.. இதுதான் கிடைச்ச விடுதலை என நிம்மதியான மகன்

- Advertisement -

Trending News