ஹனிமூன்-க்கு குடும்பத்துடன் போகும் ஜோடி.. ஏழு ஜென்மம் எடுத்தாலும் பாண்டியன் திருந்தவே மாட்டார் போல

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2, மற்ற நாடகங்களை கம்பேர் பண்ணி பார்க்கும் பொழுது இந்த நாடகம் ஓரளவுக்கு பரவாயில்லை என்பதற்கு ஏற்ப இருக்கிறது. காரணம் ஆண் மகன்களை கட்டுக்கோப்பாக எப்படி வளர்க்க வேண்டும். அப்பா மீது பாசம், மரியாதையுடன் எப்படி இருந்து கொள்ள வேண்டும் என்று காட்டும் விதமாக கதை இருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் நாடகமாக இருந்து வருகிறது.

இதில் செந்தில் மட்டும் அப்பா பாசத்தையும் தாண்டி அவருக்கு ஏற்பட்ட காதலால் மீனாவுடன் சேர்ந்து விட்டார். அந்த வகையில் மீனாவும் பாண்டியன் வீட்டிற்கு வந்து குடும்பத்தில் ஒருவராக ஒன்றி போய்விட்டார். அதே மாதிரி அனைவருக்கும் நல்ல மருமகளாகவும் ஒரு சிறந்த மனைவியாகவும் தன்னுடைய கதாபாத்திரத்தை சரிவர செய்து வருகிறார்.

இந்நிலையில் செந்திலிடம் நாம் ஹனிமூன் போயிட்டு வரலாமா என்று கேட்கிறார். செந்தில், மீனாவின் சொல்லை தட்ட முடியாமல் ஓகே என்று சொல்லி அப்பாவிடம் பெர்மிஷன் கேட்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டார். அந்த வகையில் அப்பாவிடம் எப்படி பேச வேண்டும் எந்த மாதிரி பேசினால் ஓகே சொல்லுவார் என்று தனியாக செந்தில் ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: குணசேகரனுக்கு எமனாக நிற்க போகும் ஆசை தம்பி.. பொண்டாட்டி பிள்ளையிடம் தஞ்சமடையும் கதிர்

இதை பார்த்த கதிர், சரவணன் மற்றும் மாமா அனைவரும் செந்திலுக்கு நம்பிக்கை கொடுத்து அப்பாவிடம் பேச சொல்கிறார்கள். வழக்கம்போல் நடு வீட்டில் வட்டமேசை மாநாடு போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் செந்தில் அப்பாவிடம் தயங்கி தயங்கி பேச வரும் நிலையில் மீனா, நானும் செந்திலும் இரண்டு மூன்று நாட்கள் கொடைக்கானல் போயிட்டு வரலாம் என்று நினைக்கிறேன்.

அதற்கு உங்களிடம் பெர்மிஷன் கேட்க வந்திருக்கிறேன் என்று போட்டு உடைத்து விடுகிறார். இதைக் கேட்ட பாண்டியன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து யோசித்த பிறகு, தன் மனைவி கோமதியிடம் நீனும் ஏதோ ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்று சொன்னல்ல என்ன இடம் என்று கேட்கிறார். உடனே கோமதியும் ஒரு கோயிலின் பெயரை சொல்லி அங்க போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்கிற மாதிரி சொல்கிறார்.

இதை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட மீனா நாங்க போகிற கொடைக்கானல் பக்கத்துல தான் அதுவும் இருக்கு. அதனால நாங்கள் அங்கேயும் போயிட்டு வந்து விடுகிறோம் என்று மீனா சொல்லுகிறார். அதற்கு பாண்டியன் போகணும்னு முடிவு பண்ணிட்டா ஏன் தனியா போகணும் குடும்பத்துடன் சேர்ந்து போயிட்டு வரலாம் என்று செந்தில் மீனா தலையில் குண்டைத் தூக்கி போட்டு விட்டார். ஆக மொத்தத்தில் ஹனிமூன் பிளான் பண்ணிய மீனா, கடைசியில் ஃபேமிலி பிக்னிக் போற மாதிரி பாண்டியன் செய்துவிட்டார்.

Also read: ரூமுக்கு ஏத்த மாதிரி பிள்ளையை பெத்துக்கணும்.. முத்துவின் குடும்பத்திற்குள் கலங்கத்தை ஏற்படுத்திய ஸ்ருதியின் அம்மா