குடும்ப அரசியலை புட்டு புட்டு வைக்கும் செங்களம்.. பயங்கரமா ஊம குத்து குத்தி இருக்கும் இயக்குனர்

சுந்தரபாண்டி, இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் தற்போது செங்களம் என்ற வெப் சீரிசை இயக்கியிருக்கிறார் இதில் கலையரசன், வாணி போஜன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். செங்களம் வெப் சீரிஸ் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளம் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த வெப் சீரிஸ் குடும்ப அரசியலை புட்டு புட்டு வைத்தது மட்டுமின்றி தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியலை வைத்து, இயக்குனர் பயங்கரமாக ஊம குத்து குத்தி இருக்கிறார். இதில் வாணி போஜன் சூரிய கலாவாக நடித்திருக்கிறார். அரசியல் குடும்பத்திற்கு திருமணம் ஆகி செல்லும் சூரிய கலா தனது கணவரை இழந்து விட அவருக்கும் அதிகார ஆசை ஏற்படுகிறது. அதனால் தன்னுடைய தோழி உடன் சத்தியமூர்த்தி குடும்பத்தின் பிடியிலிருந்து அதிகாரத்தை எப்படி கைப்பற்றுகிறார் என்பதுதான் இந்த வெப் சீரிஸின் மையக்கரு.

Also Read: குடும்பத்தோடு பார்க்க முடியாத 6 வெப் சீரிஸ்.. எல்லையை மீறிய ஜெய்-வாணி போஜன் 18+ மோசமான காட்சிகள்

இதில் வாரிசு அரசியலைப் பற்றி புட்டு புட்டு வைத்துள்ளனர். அது மட்டுமல்ல இந்திய அளவில் அரசியல்வாதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதலை அப்படியே படத்தில் வைத்திருக்கின்றனர். மேலும் மத்தியில் செல்வாக்கு உடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் பெயரை அப்படியே இந்த படத்தில் குடும்ப அரசியல் செய்யும் சிவஞானத்தின் வீட்டிற்கு வைத்திருப்பது இயக்குனரின் கில்லாடித்தனம்.

இந்த படத்தில் சத்தியமூர்த்தி ஆக போட்டோவில் காட்டப்பட்டவர் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்எஸ் ராஜேந்திரன். இவர் அரசியல் வாழ்க்கையை ஆளுங்கட்சியில் ஆரம்பித்தாலும், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு எதிர்க்கட்சிக்கு வந்தார். பின் 1980 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் ஆனார்.

Also Read: வாணி போஜனிடம் மயங்கி, டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட 4 நடிகர்கள்.. அடுத்தடுத்து 2 பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ

இப்படி இவருடைய வரலாறு இருக்க, ஒரு மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த எம்எல்ஏவாக மாறிய பின், அந்த மாவட்டத்தையே கட்டுப்படுத்தக்கூடிய ஆளுங்கட்சியின் நடவடிக்கையை இந்த படத்தின் மூலம் அப்பட்டமாக காட்டி உள்ளனர். இதே போன்று சூரிய கலா முதல் முதலாக அதிகாரம் கையில் கிடைத்த பின் பால்கனியில் இருந்து தொண்டர்களை பார்த்து கை அசைப்பது, அவர் உடுத்தி இருக்கும் புடவை, அவரது உடல் மொழி, கையில் கட்டி இருக்கும் வாட்ச் என அனைத்துமே ஜெயலலிதாவை நினைவு படுத்தியது.

அதுமட்டுமல்ல இந்த படத்தில் தொண்டர்கள் அனைவரும் ‘தங்கத் தாரகை’ என அழைப்பது அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருந்தது. மேலும் இதில் சூரிய கலாவின் நிழலாக அவருடைய தோழி நாச்சியார் என்ற கதாபாத்திரமும் இடம்பெற்றது. இவர் சூரிய கலாவின் உடன் பிறவாத சகோதரி போலவே இருந்தார். பின் சூரியகலா இறந்த பிறகு நாச்சியார் இடம் விசாரணை நடத்தப்படுவது என முழுவதும் அந்த கதாபாத்திரங்களை ஜெயலலிதா, சசிகலா மனதில் வைத்தே இயக்குனர் உருவாக்கியிருப்பதாக தெரிகிறது.

Also Read: சமீபத்தில் தியேட்டரை மிரள வைத்த 5 படங்கள்.. பல பேர் மறந்த பரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த படம்.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்