குடும்பத்தோடு பார்க்க முடியாத 6 வெப் சீரிஸ்.. எல்லையை மீறிய ஜெய்-வாணி போஜன் 18+ மோசமான காட்சிகள்

சினிமா துறையில் ஓடிடி தளங்கள் பிரபலம் அடைந்த பிறகு வெப் சீரிஸ்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ரசிகர்களும் திரைப்படத்தை விட வெப் சீரிஸ்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் இது போன்ற ஓடிடி ரிலீஸினால் நிறைய காட்சிகள் தணிக்கை செய்யப்படாமலேயே ரிலீஸ் ஆகி விடுகின்றன. இதனால் நிறைய சீரிஸ்களை குடும்பத்துடன் பார்க்க முடியாத நிலையும் இருக்கிறது.

ட்ரிபிள்ஸ்: ஜெய், வாணி போஜன் நடிப்பில் வெளியான ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சீரிஸை தயாரித்து இருந்தார். ரொமான்டிக் காமெடி என்ற பெயரில் இதில் அடல்ட் காட்சிகள் அதிகமாக இருந்தது. நண்பர்களுடன் கோவா பயணம் செல்வது போல் எடுக்கப்பட்ட இந்த கதை எட்டு எபிசோடுகளை கொண்டது.

Also Read: டபுள் ஹீரோ நடிகர் என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகர்கள்.. இன்னும் தனியாக ஹிட் கொடுக்க முடியாத அழகர் ஜெய்

விலங்கு: நடிகர் விமலின் சிறந்த நடிப்பில் வெளியான சீரிஸ் விலங்கு. இந்த சீரிஸில் விமலுடன் இனியா, முனீஸ்காந்த், பாலசரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். குற்ற புலனாய்வு கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடர் மொத்தம் ஏழு எபிசோடுகளை கொண்டது.

ஆட்டோ ஷங்கர்: தூக்கு தண்டனை கைதி, ஆட்டோ ஷங்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ் ஆட்டோ ஷங்கர். சீரியல் கில்லரான இவரின் வாழ்க்கை கதை 1985ல் இருந்து 1995 வரையிலான சென்னையை கண் முன் கொண்டு வந்தது. மேலும் இதில் வன்முறை காட்சிகள் மற்றும் அடல்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும்.

கள்ளச்சிரிப்பு: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த முதல் வலைத்தொடர் கள்ளச்சிரிப்பு. இந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் எல்ஜிபிடி, கருக்கலைப்பு, ஓரினசேர்க்கை என முழுக்க அடல்ட் காட்சிகள் நிறைந்த தொடர் இது.

Also Read: தவறான உறவில் இருந்தேன்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அங்காடி தெரு அஞ்சலி

D7: ரொமான்டிக் காமெடியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சீரிஸ் இது. சச்சின் மணி, அருள் தாஸ், வினோதினி, ஐஸ்வர்யா, மீனாட்ஷி ஆகியோர் இதில் நடித்திருக்கின்றனர். லிவ்விங் ரிலேஷன்ஷிப்பை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டிருந்தது. அடல்ட் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இந்த தொடரில் இருக்கும்.

ஜமாய் ராஜா : இந்தி தொடரான ஜமாய் ராஜா ஜீ தொலைக்காட்சியில் வந்தது. இந்த தொடரை பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் தயாரித்திருந்தார். இது ஒரு ரொமான்டிக் த்ரில்லர் வெப் தொடர் ஆகும். இந்த தொடர் மூன்று சீசன்களாக வெளியானது.

Also Read:2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்