மொக்கையான செம்பருத்தி சீரியல்.. ஒன்பது சீரியல் நடிகைகளையும் தரையிறக்கிய ஜீ தமிழ்

ஜீ தமிழில் பிரபலமாக ஓடி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சீரியல்களில் ஒன்றுதான் செம்பருத்தி. சிறிது காலமாக டல் அடிக்க தொடங்கிய இந்த சீரியலை விறுவிறுப்பாக மாற்ற பல புதிய திருப்பங்களை ஏற்படுத்த உள்ளனர்.

முதலில் செம்பருத்தி சீரியல் தொடங்கியதிலிருந்தே மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று டிஆர்பில் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்தத் தொடரில் வேலைக்காரப் பெண் பார்வதி, முதலாளி மகன் ஆதியை ரகசியமாக காதலித்து திருமணம் செய்கிறார்.

பிறகு உண்மை தெரிய வந்து அகிலாண்டேஸ்வரி, அவர்களை விலக்கி வைத்து பின் கோபம் தணிந்து அரைமனதுடன் பார்வதியை ஏற்றுக்கொண்டார். சில நாட்களாக சீரியல் டல்லடிக்க தொடங்கியதால் விறுவிறுப்பை மெருகேற்ற எந்த தொடரிலும் இல்லாமல் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விதத்தில் உயிருக்குப் போராடும் அகிலாவுக்காக பல பூஜைகளையும், பிரார்த்தனையயும் செய்து வரும் பார்வதி புதிதாக நவகிரக பரிகார பூஜையை செய்ய உள்ளார்.

Sembaruthi
sembaruthi serial-cinemapettai

இந்த நவகிரக பூஜையில் 9 அம்மன்களாக ஜீ தமிழின் மற்ற சீரியல் கதாநாயகிகளான தேவயானி,ரேஷ்மா, நட்சத்திரா மற்றும் பல ஒன்பது கதாநாயகிகள் பார்வதிக்கு உதவ உள்ள இந்த புது கதைக்களம் மக்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகம் தூண்டி உள்ளது.

இவர்களின் இந்த புது முயற்சி வெற்றி பெறுமா? என பொறுத்திருந்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்