இந்து பையனுடன் காதல்.. தனது காதலரை முதன் முறையாக புகைப்படத்துடன் அறிவித்த பார்வதி

முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து பல்வேறு தடைகளை எதிர்த்து போராடி தற்போது சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஷபானா. இவர் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்து அம்மாவின் துணையுடன் திரையில் நடிக்கும் தன்னுடைய கனவை நினைவாகி உள்ளார்.

கேரளாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்த ஷபானா, விஜயதசமி என்ற மலையாள சீரியலில் கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் செம்பருத்தி சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் சின்னத்திரையில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இவர் சீரியலில் நடிக்கும்போது பொட்டு வைப்பதற்கும், இந்து பையனுடன் காதல் காட்சியை நடிப்பதற்கும் ஷபானாவின் சொந்தபந்தங்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அதையெல்லாம் தூசி போல் தட்டி விட்டு தொடர்ந்து தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் ஷபானா நடித்த முதல் சீரியல் ஆன செம்பருத்தி சீரியல் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான விருதுகளும் ரசிகர் கூட்டமும் கிடைத்துள்ளது. மேலும் ஷபானாவின் திருமணம் மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் உலாவியது.

serial-actress-shabana-aryan
serial-actress-shabana-aryan

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷபானா நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருந்த, நடிகர் ஆர்யன் உடன் மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் திருமண நிச்சயம் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

நடிகர் ஆர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்