செம்பருத்தி சீரியலில் இருந்து துரத்தி விடப்பட்ட ஹீரோ.. சர்ச்சை குறித்து வாய் திறந்த கார்த்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் தான் அவர்களுடைய ஜாக்பாட் சீரியல். செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் ஜீ தமிழ் டிஆர்பி ரேட்டிங் படுபயங்கரமாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மார்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக கார்த்திக் ராஜ் என்பவர் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் டிவியில் ஆபிஸ் போன்ற சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஜோடியாக ஷபானா என்ற நாயகி நடித்து வந்தார். மேலும் மாமியார் கதாபாத்திரத்தில் பிரபல நடிகை பிரியாராமன் நடித்து வந்தார்.

இந்த சீரியல்தான் ஜீ தமிழ் சீரியலில் அதிக டிஆர்பி பெறும் சீரியல். இந்நிலையில் சமீபத்தில் செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறிய துணை நடிகை ஒருவர் நடிகர் கார்த்திக் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும் கார்த்திக்கின் ஆணாதிக்கம் அந்த சீரியலை சிதைக்கிறது எனவும் ஓபன் ஆக ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். இதை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்பிறகு செம்பருத்தி சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து விட்டதாக தெரிகிறது. கார்த்திக் கதாபாத்திரத்திற்கு மாற்றாக யூடியூப் சேனலில் வேலை செய்த அக்னி என்பவரை ஹீரோவாக்கினார்கள்.

karthik-sembaruthi
karthik-sembaruthi

முதலுக்கே மோசம் என்பதைப்போல இவர் நடித்த முதல் சில எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லையாம். இதனால் மீண்டும் செம்பருத்தி குழு கார்த்திக்கிடம் தஞ்சமடைந்துள்ளதாம். இதுவரை செம்பருத்தி சீரியல் சர்ச்சை பற்றி வாய் திறக்காத கார்த்திக் முதல் முறையாக, ஒரே சூரியன், ஒரே சந்திரன் மற்றும் ஒரே நியாயம் தான் என தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிலிருந்து செம்பருத்தி சீரியலில் நியாயமாக செயல்பட்டவர் நான் தான் எனவும், அதனால் தான் மீண்டும் அந்த வாய்ப்பு தன்னை தேடி வந்திருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் அந்த பஞ்ச் டயலாக் கொஞ்சம் ஓவர் ஜி!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்