வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கோபி செய்த மட்டமான வேலையை பாக்யாவிடம் போட்டுக் கொடுத்த செல்வி.. செழியன் எடுக்க போகும் முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, ஹோட்டலில் ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய வேண்டும். அத்துடன் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்ட மக்கள் உடல் ரீதியாக அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று பாக்யா முயற்சி எடுக்கிறார். அதன்படி ஹோட்டலில் சம்பாதித்த பணத்தையும் செலவுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் இனியா, தூங்காமல் அவஸ்தைப்படும் பொழுது பாக்கியா சமாதானப்படுத்தி விட்டு கீழே வருகிறார். அப்படி கீழே வந்து பார்க்கும் பொழுது ஈஸ்வரியும் தூங்காமல் தனியாக இருந்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். உடனே பாக்கியா, ஈஸ்வரியை சமாதானப்படுத்தி தூங்கவைத்துவிட்டு கணக்குகளை பார்க்கிறார். பிறகு மறுநாள் செல்வி வீட்டுக்கு வருகிறார்.

உடனே செல்வி மற்றும் பாக்கியா இருவரும் சேர்ந்து நடைபயிற்சி போகிறார்கள். அப்படி வெளியே போகும் பொழுது பாக்கியா ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சனையையும் பட்ட அவமானத்தையும் பக்கத்தில் இருப்பவர்கள் பேசி பாக்கியாவை நோகடிக்கிறார்கள். இருந்தாலும் இதைப் பற்றி கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் பாக்யா செல்வியுடன் போய்க் கொண்டிருக்கிறார்.

அங்கே வந்த கோபி, இதுதான் சான்ஸ் என்று பாக்யாவை அவமானப்படுத்தி மட்டம் தட்டி பேசுகிறார். இந்த ஒரு தருணத்திற்காக தான் நான் காத்துக் கொண்டிருந்தேன், இனி உன்னால ஒன்னும் பண்ண முடியாது. ஒரு ஓரமா முடங்கி கிடக்கணும் என்று வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இருந்தாலும் பாக்யா நம்பிக்கை விட்டு விடாமல் கோபிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் அவ்வளவு சீக்கிரமாக அடங்கிப் போக மாட்டேன்.

என்னுடைய வெற்றியை நான் நிலை நிறுத்துவேன், என்னுடைய பாதையை எனக்காக நான் அமைத்துக் கொள்வேன் என்று வீர வசனமாக பேசுகிறார். பிறகு கோபி போனதும் செல்வி, பாக்யாவிடம் எனக்கு என்னமோ கோபி சார் மீதுதான் சந்தேகம் வருகிறது. இந்த அளவுக்கு பிரச்சனையும் ஹோட்டலில் பட்ட அவமானத்திற்கும் கோபி சார் தான் காரணமாக இருப்பாரோ என்று தோன்றுகிறது என பாக்யாவிடம் சொல்கிறார்.

அதன்படி பாக்யாவிற்கும் கொஞ்சம் சந்தேகம் வருகிறது. இதனை தொடர்ந்து எங்கே தப்பு நடந்தது என்று கண்டுபிடிக்கும் விதமாக கோபி செய்த மட்டமான வேலையை பாக்யா கண்டுபிடித்து விடுவார். அடுத்ததாக ஜெனி அம்மா வீட்டிற்கு வருகிறார். வந்ததும் என் மகள் இங்கே சந்தோஷமாக இருப்பதை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அதனால் கொஞ்ச நாள் என்னுடன் கூட்டிட்டு போகலாம் என்று நினைக்கிறேன் என சொல்லுகிறார்.

வழக்கம்போல் ஈஸ்வரி மற்றும் பாக்யா, தாராளமாக ஜெனியை கூட்டிட்டு போய் வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லப் போகிறார்கள். அதே மாதிரி கொஞ்சம் செழியனும் மன அழுத்தத்தில் இருப்பதால் இதுதான் சான்ஸ் என்று ஜெனியுடன் வீட்டிற்கு போகப் போகிறாரா? அல்லது தனியாக போகப்போகிறாரா என்று கோபி கொடுக்கும் அட்வைஸ் படி செழியன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

Trending News