ராதிகா-கோபிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சத்தியமூர்த்தி.. அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிரடி திருப்பம் அரங்கேறி உள்ளது. ஏனென்றால் கோபியின் அப்பா சத்தியமூர்த்தி, ராதிகாவிற்கு கோபி மல்லிகைப்பூ வாங்கிக் கொடுப்பதை பார்த்துவிட்டார்.

ஏற்கனவே கோபியை ராதிகா வீட்டிற்கு செல்லக்கூடாது என்று கண்டித்த சத்தியமூர்த்திக்கு, மீண்டும் கோபி இப்படியெல்லாம் நடந்து கொள்வது பேரதிர்ச்சியாக இருந்தது. எனவே இதைப் பொறுத்துக் கொள்ளாத சத்தியமூர்த்தி ராதிகாவின் வீட்டிற்கு சென்று, அங்கு இருந்த ராதிகாவின் அம்மாவிடம் ராதிகா இனிமேல் கோபியை சந்தித்துப் பேசி பழகுவதை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள் என்று வார்னிங் கொடுத்தார்.

இந்த விஷயத்தை அறிந்த கோபி, சத்தியமூர்த்தியிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் சத்தியமூர்த்தி பாக்கியாவிடம் எந்த உண்மையையும் சொல்லக்கூடாது என்பதை இவ்வளவு நாட்களாக கடைபிடித்த நிலையில், கோபியின் அத்துமீறலால் இனி பாக்கியாவிடம் எதையும் மறைக்க கூடாது என்று சத்தியமூர்த்தி முடிவெடுத்துள்ளார்.

இந்த முடிவை கோபியிடம் சொல்ல, இவ்வளவு நாள் சத்தியமூர்த்தியை அசால்டாக எண்ணிய கோபி கொஞ்சம் கொஞ்சமாக சத்தியமூர்த்திக்கு பயப்பட தொடங்கிவிட்டார்.

ஏனென்றால் ராதிகாவிடம், பாக்கியா தான் கோபியின் கணவர் என்ற உண்மையை சத்தியமூர்த்தி சொல்லிவிடுவார் என்றும், பாக்கியாவிடம் ராதிகா மற்றும் கோபியின் தகாத உறவை போட்டு உடைத்து விடுவார் என்றும் கோபிக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது.

இந்த சூழலில் இனி ராதிகாவை சந்தித்துப் பேச பழக கூடாது என்று கோபியிடம் சத்தியமூர்த்தி சத்தியம் வாங்கி உள்ளார். ஆனால் கோபிக்கு சத்தியம் என்றால் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடுவது போல் சத்தியம் வாங்கியது எல்லாம் தூக்கி இதையெல்லாம் எறிந்து விட்டு மீண்டும் ராதிகா வீட்டின் கதவைத் தட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்