செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

தலையில் தூக்கி வைத்து ஆடிய சத்தியம் தியேட்டரின் பரிதாப நிலை. பலநூறு கோடிகளுக்கு இல்லாத மதிப்பு

Sathyam Theater: சென்னை மவுண்ட் ரோடு என்றாலே ஸ்பென்சர் பிளாசா, எல்ஐசி, சத்தியம் தியேட்டர் தான் நினைவுக்கு வரும். இந்த சத்தியம் தியேட்டரில் நடக்காத விழாக்களே கிடையாது. சினிமா சம்பந்தப்பட்ட முக்கியமான நிகழ்ச்சிகள் இந்த தியேட்டரில் தான் நடக்கும்.

இந்த தியேட்டரின் முன்னாள் ஓனர் சொரூப ரெட்டி. இப்பொழுது இந்த தியேட்டர் இவர் கைவசம் இல்லை. பல நூறு கோடிகளுக்கு ஆசைப்பட்டு இந்த தியேட்டரை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இன்று அந்த தியேட்டரில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது. சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதே இல்லை.

இரவு 9 மணிக்கு மேல் சத்தியம் தியேட்டர் பக்கம் சென்றால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாவது டிராபிக்கில் மாட்டிக் கொள்வோம். ஆனால் இப்பொழுது அந்த ரோடு காத்து வாங்குகிறது. காரணம் படம் பார்க்க மக்கள் வருவதே இல்லை.

பலநூறு கோடிகளுக்கு இல்லாத மதிப்பு

இந்த தியேட்டரை பிவிஆர் சினிமாஸ் 400 கோடிகள் கொடுத்து வாங்கி விட்டது. இப்பொழுது பராமரிப்பே இல்லை. அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர் பி வி ஆர் சினிமாஸ். இந்த நிறுவனத்தின் ஓனர்களாகிய அஜய் மற்றும் சஞ்சீவ் ஏதாவது மாற்றம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு காலத்தில் அடையாளமாக விளங்கிய சத்தியம் தியேட்டர் இன்று ஹவுஸ்புல் காட்சிகளை பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது. பிவிஆர் சினிமாஸ் அவர்களுடைய தியேட்டர்களுக்கே முன்னுரிமை கொடுத்துவிட்டு இதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News